tamilnadu

மதுரை முக்கிய செய்திகள்

நீர் நிலை ஆக்கிரமிப்புளை  அகற்ற ஆட்சியர் உறுதி

கிருஷ்ணகிரி, செப்30- கிருஷ்ணகிரி மாவட்டத் தில் நீர் நிலைகள் ஆக்கிர மிப்புகள் நிச்சயம் அகற்றப் படும் என விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித் தார். விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் கிருஷ்ண கிரி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது. நடப்பு ஆண்டு தமிழக அர சால் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட மானிய திட்டங்கள் அடங்கிய கையேட்டை மாவட்ட ஆட்சி யர் வெளியிட்டார். சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு ஏற்ப உரிய திட்டத்தின் மூலம் பயனடையலாம், தென்னை கருத்தலை புழு பிரச்சனைக்கு ஒட்டுண்ணி விடுதல், வேம்பு சார் மருந்து தெளிக்கப்பட விவசாயி களுக்கு திட்ட உதவி வழங்கப் படும் என்றும் நீர் நிலை, கால்வாய் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்படும் என்றும் ஆட்சி யர் தெரிவித்தார். முன்னுரிமை அடிப்படை யில் விவசாயிகள் மானியம் பெற்று பயனடையலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறினார். சூளகிரியிலும் காணொ லிக் காட்சி மூலம் வட்டார விவாசாயிகள் குறை தீர்க்கு நாள் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் இணை இயக்குநர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் மூர்த்தி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ராம் பிர சாத், உதவி இயக்குநர் புவ னேஸ்வரியும் கலந்து கொண் டனர். சூளகிரிப் பகுதி டோரிப் பள்ளி, குண்டுக் குறுக்கி, விவசாயிகள் நிலத்தை அனு மதி பெறாமல் சிப்காட்டிற்கு தேர்வு செய்யக்கூடாது என கோரிக்கை விடுக்கப்பட் டதற்கு விவசாயிகள் அனு மதியின்றி நிலம் தேர்வு செய் யப்படாது என கூறினார்.

ரூ.80 லட்சம் மோசடி

விழுப்புரம், செப்.30- விழுப்புரம் அருகே வேலை வாங்கி தருவதாக கூறி 52 பேரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி வி.சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (42). இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அந்த கிராமத்தை சேர்ந்த மக்களிடம் ரூ. 80 லட்சம் பெற்று உள்ளார். ஆனால் யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. எனவே பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் செய்தனர். அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்த னர். அரசு வேலை வாங்கித் தருவதாக அல்லது வெளி நாட்டில் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக கூறும் மோசடி நபர்களிடம் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

வாக்காளர் பெயர் நீக்கம்

விழுப்புரம், செப்.30-    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து விழுப்புரம் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களில் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடை பெற உள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ஈச்சங்குப்பம் கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை கோவில் உண்டியல் வசூல் குறைந்தது

திருவண்ணாமலை,செப்.30- பவுர்ணமி முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று அருணா சலேஸ்வரர் கோவில் உண்டியல்கள் அனைத்தும் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருவார்கள். ஒவ்வொரு பவுர்ணமிக்கும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருகை தருகிறார்கள். பவுர்ணமி முடிவடைந்ததும் கோவில் உண்டியல்களை திறந்து பக்தர்கள் செலுத்தும் காணிக்கை எண்ணப்படும். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல்கள் அனைத்தும் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணப்பட்டது.  கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் காணிக்கையாக ரூ. 55,15 ஆயிரத்து 309 வசூலாகி இருந்தது தெரியவந்தது.மேலும் 268 கிராம் தங்கம், 221 கிராம் வெள்ளி பொருட்களையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.கொரோனா பரவலுக்கு முன்பு பவுர்ணமி கிரிவலம் முடிந்து உண்டியல் எண்ணும் போது ரூ.1 கோடிக்கு மேல் காணிக்கை பணம் வசூலாகி இருக்கும். ஆனால் தற்போது கணிசமாக குறைந்துவிட்டது.


 

;