tamilnadu

மதுரை விரைவு செய்திகள்

சென்னை திரும்பிய தமிழக ஆளுநர்

உதகை, அக்.19- உதகைக்கு வருகை புரிந்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி செவ்வாயன்று சென்னை திரும்பினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்துடன் கடந்த அக்.15 ஆம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) உத கைக்கு வருகை புரிந்தார். ராஜ்பவனில் தங்கியிருந்த அவர் சனியன்று அப்பர் பவானி அணைக்கு  சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தார். இதன்பின் ஞாயிறன்று உதகை-குன்னூர் மலை ரயிலில் பயணம் செய்த அவர், உதகை தாவரவியல் பூங்காவில் மரக்கன்றுகளையும் நட்  டார். இதைத்தொடர்ந்து திங்களன்று ராஜ்பவன் மாளிகை யில் பழங்குடியினரின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த ஆளுநர் ஆர்.என்.ரவி செவ்வாயன்று காலை குடும்பத்துடன் சென்னை திரும்பினார்.

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

உதகை, அக்.19- நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிர மணி (45). இவர் 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை  கொடுத்ததாக கடந்த மாதம் 26 ஆம் தேதி சேரம்பாடி போலீசா ரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது போக்சோ சட்டத்தில்  வழக்கு பதிவு செய்து கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சுப்ரமணியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய  மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா  உத்தரவிட்டதன் பேரில், குண்டர் சட்டத்தில் சுப்பிரமணியை போலீசார் கைது  செய்தனர். இதன்பின் கூடலூர் கிளை சிறையில் இருந்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கால்நடைகளை தாக்கி கொன்ற செந்நாய்கள் - பொதுமக்கள் அச்சம்

உதகை, அக்.19- பந்தலூர் அருகே கால்நடைகளை செந்நாய்கள் தாக்கி கொன்று வருவதாகல் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள் ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகேயுள்ள சேரம்பாடி நாயக்கன்சோலை பகுதியைச் சேர்ந்த தியாகராஜ் என்ற விவ சாயி தனக்கு சொந்தமான இரண்டு ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். இரவு  நீண்ட நேரம் ஆகியும் ஆடுகள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தியாகராஜன் உறவினர்களுடன் ஆடுகளை தேடி  சென்றார். அப்போது அங்குள்ள புல்வெளியில் செந்நாய் கூட்டம் ஒன்று, காணாமல் போன ஆடுகளை கொன்று உடலை தின்றுவிட்டு எலும்புகளை மட்டும் போட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  இதையடுத்து உடனடியாக அவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பின் வனக்காப்பாளர், வேட்டை தடுப்பு காவலர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த னர். இதையடுத்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். ஏற்கனவே அப் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட ஆடுகளை செந்நாய்கள் கொன் றுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இரு மாதங்களாக வழங்கப்படாத கூலி நூறு நாள் வேலைதிட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

உதகை, அக்.19- சேரங்கோட்டில் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி புரியும் தொழிலாளர்கள், நிலுவை சம்பளத்தை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உதகையை அடுத்த சேரங்கோடு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தினக்கூலி கடந்த 2 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் தொழிலா ளர்கள் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து ஊராட்சி அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின் ஊராட்சி செயலாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், பத்து நாட்களுக்குள் நிலுவை கூலியை வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து தொழிலா ளர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

சீர்மிகு நகரம் திட்டப்பணிகள் ஆய்வு

திருப்பூர், அக்.19- திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி செவ்வாயன்று சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் மாந கராட்சி பகுதிகளில் நடை பெற்று வரும் பல்வேறு பணி களை பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டார்.அதன்படி,  மண்டலம் -1 வார்டு-14க்கு உட்பட்ட பாட்டையப்பன் நகர், மண்டலம்-2க்கு உட் பட்ட கொங்கு மெயின் ரோடு, மண்டலம்-3க்கு உட்பட்ட  பெரிய தோட்டம், பெரிய பள்ளிவாசல் வீதி மற்றும் கோர்ட் வீதி அரசு பள்ளி ஆகிய மாநகராட்சி பகுதி களில் சீர்மிகு நகரம் திட்டத் தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர், மின் விளக்குகள் மற்றும் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

;