கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் தொடரின் 144ஆவது சீசன் நியூயார்க் நகரில் ஆகஸ்ட் 26 அன்று தொடங்கிய நிலையில், தற் போது இந்த தொடரில் ரவுண்ட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போபண்ணா ஜோடி அசத்தல் இந்திய நேரப்படி ஞாயிறன்று அதி காலை நடைபெற்ற கலப்பு இரட்டை யர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் போபண்ணா - இந் தோனேசியாவின் அல்டிலா சுத்ஜி யாடி ஜோடியும், ஆஸ்திரேலியாவின் ஜான் பீர்ஸ் - செக்குடியரசின் சினியா கோவாவும் மோதினர். தொடக்கத்தில் ஜான் பீர்ஸ் - சினியாகோவா ஆதிக்கம் செலுத்தினாலும், 2ஆவது செட்டிற்கு பிறகு சுதாரித்து விளையாடிய போபண்ணா - அல்டிலா ஜோடி 0-6, 7-6 (7-5), 10-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. மெத்வதேவ் அபாரம் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் மெத்வதேவ், தரவரிசையில் 31ஆவது இடத்தில் உள்ள இத்தாலியின் பிலவி யோவை எதிர்கொண்டார். தனது வழக்கமான அதிரடி மூலம் பிலவி யோவை 6-3, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார் மெத்வதேவ். இதே சுற்றில் ஆஸ்திரேலியா வீரர்கள் டி மினார், தாம்ப்சன் ஆகியோர்களும் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினர். இதில் தரவரிசையிலேயே இல்லாத தாம்ப்சன், தரவரிசையில் 30ஆவது இடத்தில் இருக்கும் இத்தாலியின் அர்னால்டியை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 4ஆவது சுற்றில் ஸ்வியாடெக் மகளிர் ஒற்றையர் பிரிவு 3ஆவது சுற்று ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் முதல்நிலை வீராங்கனையான போலந்தின் ஸ்வியாடெக், தரவரிசை யில் 25ஆவது இடத்தில் உள்ள ரஷ்யா வின் அனஸ்டாசியாவை எதிர்கொண் டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். இதே பிரிவில் பிரேசிலின் ஹதாத் மாயா, ரஷ்யாவின் சம்சோநோவா, டென்மார்க்கின் வொஸ்னியாக்கி ஆகி யோரும் 3ஆவது சுற்றில் வெற்றி பெற்று 4ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.