tamilnadu

img

விவசாயிகள் என்றாலே பதறும் பாஜக... குமரியில் பிடித்து கேரளத்தில் விட்ட காவல்துறை...

நாகர்கோவில்:
மத்திய அரசு மோசடியாக நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களைதிரும்பப் பெற வலியுறுத்தி தில்லிஎல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த நவம்பர் 27 ஆம் தேதி முதல் முற்றுகையிட்டுள்ள விவசாயிகளிடம் பேச்சுவார்த்தைஎன்கிற பெயரில் தொடக்கத்தில் நாடகமாடிய மத்திய அரசு அண்மைக்காலமாக கண்டு கொள்ளவில்லை. கடும் பனியிலும் வெயிலிலும் விவசாயிகள் தங்களது உடலை வருத்தி இப்போராட்டத்தை தொடர்கிறார்கள்.

இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய  5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவுக்கு எதிராக தங்களதுபோராட்டம் மாறும் என போராட்டக்குழுஅறிவித்துள்ளது. இதனால் பதற்றமடைந்துள்ள பாஜகவினர் உளவுத்துறையை மிஞ்சும் வகையில் மக்கள் கூடும் இடங்களை கண்காணித்து வருகிறார்கள். கடந்த வெள்ளியன்று (மார்ச் 12) பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சிலவிவசாயிகள் குமரி முனைக்கு வந்தனர். அவர்கள் குமரி முனையில் உள்ள விவேகானந்தா கேந்திரத்தில் தங்கியிருந்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளை ஆதரித்து குமரியிலிருந்து காஷ்மீர் வரை சைக்கிள் பிரச்சாரம் செய்வதற்காக வந்துள்ளதாகவும் பயணத்தை  கோதையாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் வின்ஸ் ஆன்றோ தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். உடனடியாக விவேகானந்தா கேந்திரத்தில் உள்ள ஊழியர்கள் (ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள்) பாஜகவினரின் துணையுடன் விகாஸ்பாபா தலைமையிலான சைக்கிள் பிரச்சார பயணக்குழுவை வெளியேற்ற முயன்றனர். கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். சைக்கிளில் செல்ல அனுமதி அளிக்க முடியாது எனக்கூறி சைக்கிள்களை பறிமுதல் செய்ததுடன் அவர்களை வேனில் ஏற்றி மண்டபத்தில் சிறை வைத்தனர். சனியன்று அதிகாலை 3 மணியளவில் அவர்களை வேனில் ஏற்றி கேரள மாநில எல்லையான களியக்காவிளையில் இறக்கிவிட்டு சைக்கிளையும் ஒப்படைத்துள்ளனர். ஒருவழியாக அவர்கள் அனைவரும் திருவனந்தபுரத்தில் உள்ள குருத்வாராவில் தஞ்சமடைந்தனர். 

;