காற்று மாசைக் கண்டித்து போராட்டம் நடத்திய தில்லி மக்களை கைது செய்த பாஜக அரசு
புதுதில்லி நாட்டின் தலைநகர் மண்டல மான தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த 2 மாத காலமாக காற்றின் தரக் குறியீடு 370 புள்ளிகளுக்கு அதிக மாக இருப்பதால், மக்கள் மூச்சு விட முடியாமல் திணறி வருகின்றனர். முக்கியமாக காற்று மாசுபாட்டால் சுவாச நோயாளிகள், நுரையீரல் தொற்று போன்ற நோயாளிகளின் வருகை அதிகரிப்பால் தில்லி மருத் துவமனைகள் நிரம்பி வழிகின்றன. நோயாளிகளை பரிசோதிக்கும் மருத்துவர்கள் தில்லியை விட்டு வெளி யேற பரிந்துரை செய்கின்றனர். இந்நிலையில், காற்று மாசைக் கண்டித்தும் தூய்மையான காற்றை சுவாசிப்பதை உறுதி செய்யக் கோரியும், 2ஆவது முறை யாக ஞாயிறன்று “இந்தியா கேட்” பகுதியில் தில்லி மக்கள் போராட் டம் நடத்தினர். இந்த போராட்டத் தில் பெற்றோர்களும், குழந்தை களும் முகக்கவசம் அணிந்து, காற்று மாசுபாடு ஏற்பட்டதற்கான ஆதார ரசீதுகளுடன் கலந்து கொண்டனர். குறிப்பாக போராட்டத்தின் போது குளிர்காலத்தில் சுவாசிப்ப தற்கு கூட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாகக் குற்றம் சாட்டியும், எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதா கைகளுடன் ஆளும் ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுக்கு எதிராக தில்லி மக்கள் முழக்க மிட்டனர். அதே போல காற்று மாசுக்கு பஞ்சாப் விவசாயிகள் மீது பழிபோடும் தில்லி பாஜக அரசு காற்று மாசை தடுக்க நிதி ஒதுக்கா தது ஏன்? என கேள்வி எழுப்பினர். ஞாயிறன்று இரவு வரை போராட்டம் நீண்டது. இந்நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்துவதாகக் கூறி பொதுமக்களை தில்லி காவல் துறை கைது செய்து பேருந்துகளில் ஏற்றியது. 60 முதல் 80 பேர் வரை கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் அதிகாரி தெரிவித்தார். இத னால் “இந்தியா கேட்” பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. குறிப்பாக கைது செய்யப்பட்ட விச யம் திங்களன்று தான் தெரிய வந்தது.
நெஞ்சுவலி பாதிப்புகள் அதிகம்
தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால் தில்லி-என்சிஆர் பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கு கடுமையான தீவிர சுகாதார பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி மேதாந்தா மருத்துவ மனையின் நுரையீரல் நிபுணரான டாக்டர் அரவிந்த் கூறுகையில், “திங்களன்று காலை 8 மணியளவில் என்சிஆர் பகுதியில் காற்று தர குறியீடு 345 ஆக இருந்தது. இது மிக மோசம் என்ற அளவில் உள்ளது. சுவாச பாதிப்புகளால் மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் அதிக ளவில் வருகின்றனர். அவர்களில், குழந்தைகள் அதிக எண்ணிக்கை யில் உள்ளனர். அவர்களுக்கு இருமல், காய்ச்சல் மற்றும் சுவாசிப்ப தில் சிரமம் ஆகிய அறிகுறிகள் உள்ளன. சிலருக்கு இருமல் அல்லது நிம்மோனியா பாதிப்புடன் மீண்டும் வருகிறார்கள். நெஞ்சு வலி பாதிப்புகள் தொடர்பாக நிறைய பேர் வருகிறார்கள்” என அவர் கூறி னார்.
