tamilnadu

img

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மதுரை வருகிறார் ராகுல்காந்தி....

மதுரை:
‘தமிழகத்தில் சட்ட மன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் ராகுல்காந்தி முதல்கட்டமாக மூன்று நாள்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் ராகுல் காந்தி, தைப்பொங்கலன்று (ஜனவரி 14 ஆம் தேதி) தமிழகம் வர உள்ளார். அன்றைய தினம் மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை அவர் பார்க்கிறார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ராகுல்காந்தி பார்வையிடுவதை காங்கிரஸின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உறுதிப்படுத்தியுள்ளார். 

;