ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரே லிய ஓபன் டென்னிஸ் தொடரில் தற்போது முதல் சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இருபாலர் ஒற்றையர் பிரிவுகளில் நட்சத்திர வீரர் - வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவுகளில் நட்சத்திர ஜோடிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. ஆனால் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரும், போராட்ட குணமுடைய அமெரிக்காவின் ஜான் இஸ்னர் சக நாட்டு வீரரான கெரெஸ்ஸியிடம் 6-7 (2-7), 5-7, 7-6 (7-4), 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் 4:10 மணிநேரம் கடும் போராட்டத்துடன் அதிர்ச்சி தோல்வியடைந்தார். சளைக்காமல் மணி கணக்கில் கடுமையான போராட்டத்துடன் விளையாடும் சிறப்பு வாய்ந்த வீரர் இஸ்னர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் தொடக்கத்திலேயே வெளியேறியது டென்னிஸ் உலகில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
இளம் புயலும் அவுட்
கடந்த வருடம் அமெரிக்க ஓபன் போட்டியை தனது அதிரடியால் மிரள வைத்த கனடாவின் லேலா பெர்னாண்டஸ் (19 வயது) 3-வது சுற்றில் ஜப்பானின் ஒசாகா, 4-வது சுற்றில் ஜெர்மனியின் கெர்பர், காலி றுதியில் அதிரடிக்கு பெயர் பெற்ற உக்ரை னைச் சேர்ந்த எலினா ஸ்விட்டோலினா, அரையிறுதியில் சபலேன்கா (பெலாரஸ்), இறுதிச்சுற்றில் இங்கிலாந்து வீரர் எம்மா ரடுகானுவிடம் தோல்வியடைந்து பட்டத்தை இழந்தார். தோல்வி அடைந்தாலும் உலகின் முன்னணி வீராங்கனைகளை போதிய அனுபவமில்லாமல் புரட்டி எடுத்ததால் குறுகிய காலத்தில் பிரபலமடைந்தார் லேலா. இந்நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலும் லேலா சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,முதல் சுற்றில் தரவரிசையில் 133-ஆம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேடிசன் இங்லிஸ் என்பவரிடம் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் லேலா அதிர்ச்சி தோல்வியடைந் தார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இங்லிஸ் இதுவரை ஒரு வெற்றியும் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.