tamilnadu

img

ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் மீது இலங்கையைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்

மூன்று பேர் காயம்

நாகப்பட்டினம், செப்.25- நாகப்பட்டினம் மாவட்டம் வேதா ரண்யத்துக்கு அப்பால் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கையைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி யுள்ளனர். இதில் காயமடைந்த வேதா ரண்யம் மீனவர்கள் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  வேதாரண்யத்தை அடுத்துள்ள ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த சின்னதம்பி, இவரது மகன் சிவா, சிவக்குமார் ஆகிய மூன்று பேர் வியா ழக்கிழமை (செப்.23) கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். வேதாரண்யத்திற்கு தென்கிழக் கில் உள்ள சர்வதேச கடல் எல்லைக் கோடு (ஐஎம்பிஎல்) அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ஆயுதங்களுடன் வந்த இலங்கையைச் சேர்ந்த பத்து பேர் ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் பட கைச் சூழ்ந்து “எல்லை மீறி மீன் பிடிக்க வந்துள்ளதாகக்” கூறி தாக்கி யுள்ளனர்.  

சிவக்குமார் என்ற மீனவரை கத்தி யாலும், சின்னதம்பி, சிவா ஆகிய இரண்டு பேரையும் இரும்புக்கம்பி களாலும் தாக்கியுள்ளனர். தாக்கு தலில் காயமடைந்த இவர்கள் மூவ ரும் வேதாரண்யம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளனர். படகிலிருந்த ஜிபிஎஸ் கருவியையும் ரூ.5 லட்சம் மதிப்பிலான மீன்களையும் அவர்கள் பறித்துச் சென்றுள்ளனர். காயமடைந்த மீனவர்கள் சனிக் கிழமை கரை திரும்பினர். தற்போது அவர்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த வர்களை சந்தித்து விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் தம்பு ராஜ், இந்தப் பிரச்சனையை “ இந்திய கடலோர காவல்படை, கடலோர பாது காப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகக் “ கூறி னார். இந்த ஒரு மாதத்திற்குள் ஐந்து முறை இந்த பிரச்சனை நடந்துள் ளது. கடலோர காவல் படை மற்றும் உயர் அதிகாரிகள் உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் அர சுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் ஆறுகாட்டுத் துறை கடற்கரை பகுதியில் பதற்ற மான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 

;