பிளஸ்டூ பொதுத்தேர்வில் அறந்தாங்கி ஐடியல் பள்ளி சாதனை
அறந்தாங்கி, மே 9- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்-என்.புரம் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி மாணவி மெர்லின் உயிரியல் பாடப்பிரிவில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். மாணவி மெர்லின் 589 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், சிபின் என்ற மாணவன் 585 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடமும், ஸ்ரீமதிவர்சினி என்ற மாணவி 584 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடமும், மூன்று பாடங்களில் 100 சதவீதம் தேர்ச்சியோடு 583 மதிப்பெண்கள் பெற்று சாஜிதா பேகம் என்ற மாணவி சாதனை படைத்தார். மேலும், 24 மாணவர்கள் 550 மதிப்பெண்களுக்கு மேலும், 50 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றிருக்கின்றனர். மாணவர்களை பள்ளி தாளாளர் ஷேக் சுல்தான்மற்றும் பள்ளி இயக்குனர்கள் மாணிக்கம், பிரபாகர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.