tamilnadu

விவசாயிகள் போராட்டம் தொடரும்...

புதுதில்லி, நவ. 29 - மூன்று வேளாண் கருப்புச் சட்டங்களை ரத்து செய்த நிகழ்வு வரலாற்று சிறப்பு மிக்கதாகும் என்று கூறியுள்ள சம்யுக்த கிசான் மோர்ச்சா (ஐக்கிய விவசாயிகள் முன்னணி) குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்குவது உள்ளிட்ட இதர - நிலுவையில் உள்ள மிக முக்கிய கோரிக்கை களை நிறைவேற்றும்வரை இதே இடத்தில் பொறுமையாகவும், நம்பிக்கையுடனும் விவசாயிகள் போராட்டத்தை தொடரு வார்கள் என்று திங்களன்று அறிவித்துள் ளது. சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் 368வது போராட்ட தினமான  2021 நவம்பர் 29 அன்று  அதன் தலைவர்கள் பல்பீர் சிங் ராஜேவால், டாக்டர் தர்சன்பால், குர்நாம் சிங் சருனி,  ஹன்னன்முல்லா, ஜக்ஜீத் சிங் தல்லே வால், ஜோகிந்தர் சிங் உக்ரகான், சிவ்குமார் சர்மா, யதுவீர் சிங், யோகேந்திர யாதவ் ஆகி யோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாய விரோத, கார்ப்பரேட் ஆதரவு கருப்புச் சட்டங்கள் மூன்றை யும் ரத்துசெய்யும் மசோதாவை இந்திய நாடாளு மன்றம் எந்தவிதமான விவாதமும் இல்லாமல் நிறைவேற்றியுள்ளது; விவசாயிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க பேரெழுச்சியின் விளைவாக இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இந்திய அரசு  தள்ளப்பட்ட நிலையிலேயே இந்த சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. இது விவசாயிகள் இயக்கத்திற்கு கிடைத்திருக்கும் முதல் வெற்றி.  ஆனால் அதே நேரத்தில் முக்கியமான கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்பட வில்லை. இந்திய அரசு, விவசாயிகள் இயக்கம் எழுப்பிய இதர கோரிக்கைகளை நிறைவேற்றா மல் தவிர்ப்பதற்கு முயற்சி செய்கிறது என்பதே உண்மை. ஆனால் எதிர்க்கட்சிகள், விவ சாயிகள் இயக்கத்தின் இதர கோரிக்கைகளை யும் நிறைவேற்ற வேண்டும் என்று அரசாங்கத்தின் மீது நிர்ப்பந்தத்தை செலுத்தி வருகிறார்கள்” என்று கூறியுள்ளனர்.

மேலும், இன்றைய நாளில் இந்தியாவில் ஒரு மாபெரும் வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் ரத்து செய்யும் சட்டமசோதாவிலும் கூட, மேற்கண்ட வேளாண் சட்டங்களைப் பற்றிய பெருமிதங்களே இடம்பெற்றுள்ளன; இதன் மூலம் நாட்டின் மக்களை திசைதிருப்பவே ஒன்றிய அரசு முயற்சி மேற்கொண்டிருக்கிறது என்று இடித்துரைத்து சுட்டிக்காட்டியுள்ள சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் தலைவர்கள், 686 விவசாயிகள் தங்களது இன்னுயிரை ஈந்துள்ள இந்தப் போராட்டம் மாபெரும் வெற்றிபெற்றிருக்கிறது; அதேவேளையில் இத்தனை அதிகமான மனித உயிர்கள் பறிபோனதற்கான பொறுப்பினை மோடி அர சாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

“போராடும் விவசாயிகள் பொறுமையுட னும், நம்பிக்கையுடனும் தங்களது போராட்ட த்தை தொடருவார்கள். நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றும் வ ரை இந்த எழுச்சி தொடரும். குறைந்தபட்ச ஆதார விலை யை சட்டப்பூர்வமாக்க வேண்டும்; தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும்; மின்சார திருத்தச் சட்ட மசோதாவை திரும் பப்பெற வேண்டும்; அனைத்து விவசாயிகள் மீதும் புனையப்பட்டுள்ள வழக்குகளை முற்றா கத் திரும்பப்பெற வேண்டும். விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை செய்யக் காரணமான ஒன்றிய அமைச்சர் அஜய் மிஷ்ராவை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் உறுதியுடன் தொடரும்” என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

;