tamilnadu

img

அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்

அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்

முதலமைச்சர் இரங்கல்

கோயம்புத்தூர், ஜூன் 21 - வால்பாறை சட்டமன்ற உறுப்பி னர் அமுல் கந்தசாமி (60) உடல்நலக் குறைவால், கோவை யில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலை யில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலமானார்.  கோவையைச் சேர்ந்த அமுல் கந்தசாமி,  2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து, சனிக்கிழமை காலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி சாமி, மருத்துவமனையில் அமுல் கந்த சாமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.  இந்நிலையில், சிகிச்சை பலன ளிக்காததால் அமுல் கந்தசாமி (60) சனிக்கிழமை மாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அதிமுக தொண் டர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  முதலமைச்சர் இரங்கல் அதிமுக வால்பாறை தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மறை வுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வால் பாறை தொகுதி மக்களுக்கும், அதிமுக கட்சி யினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.