விவசாயத் தொழிலாளர்கள் சங்க கிளை அமைப்புக் கூட்டம்
தஞ்சாவூர், ஏப்.28- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம், அதம்பை தெற்கு, நேதாஜி தெருவில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை அமைப்புக் கூட்டம் ஆசைத்தம்பி தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு பேசினார். கூட்டத்தில், விவசாயத் தொழிலாளர் சங்க பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கே. பெஞ்சமின், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் டி. சிவகாமசுந்தரி, ஆர். மூக்கையன், நம்பிவயல் கிளைத் தலைவர் காந்திமதி மற்றும் 15-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தலைவராக முனுசாமி, செயலாளராக குணசீலன், பொருளாளராக பஞ்சவர்ணம், துணைத் தலைவராக மாரியம்மாள், துணைச் செயலாளராக குருதேவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வருகிற மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவது. மே 20 ஆம் தேதி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் உள்ளிட்ட விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் நடத்தும் இயக்கங்களில் பங்கேற்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.