tamilnadu

மோடி அரசின் ஆணவத்தை தகர்த்த விவசாயத் தொழிலாளர்கள்! - அ.பழநிசாமி

2021 ஏப்ரல் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிய ளிப்பு சட்டத்தில் வேலை செய்யும் தொழிலா ளர்களை சாதியாக பிரிவினை செய்து வேலை யும் கூலியும் வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசு தனது சமூக நலம் மற்றும் அதி காரமளிப்பு துறை மூலம் அனைத்து மாநில அரசுகளையும் அறிவுறுத்தி உத்தரவு பிறப் பித்தது.  5 மாநில தேர்தல் பரபரப்பில் தேசம் இருந்த போது மெல்ல சத்தமே இல்லாமல் ஒன்றுபட்டு பணி செய்யும் தொழிலாளர்க ளை சாதியாக பிரிவினை செய்யும் உத்தரவு வந்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஜூன் மாதத்தில் மாநில அரசுகள்  அம லாக்கம் செய்த போது தான் வெளி உலகிற்கு தெரிய வந்தது.  

மக்கள் ஒற்றுமையை  அரசே சிதைக்கலாமா? 

14.76 கோடி மக்கள் ஒற்றுமையாக வேலை  செய்யும் திட்டத்தை ஒழித்திட மோடி அரசு முனைந்தது. அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் சண்டை சச்சரவுகளின்றி ஒன்றாக வேலை பார்ப்பதோடு தங்களது வேலை பாதுகாப்புக்காகவும் உரிமைகளுக்காகவும் ஒன்றுபட்டு போராடியவர்களை சாதியாக பிரி வினை செய்தது என்பது மிகப் பெரிய அரச பயங்கரவாத நடவடிக்கையாகும். கிராமப்புற திருவிழாக்களை நூறு நாள் வேலைத் தொழி லாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நடத்து கிறார்கள். பொங்கல் வைத்து கிடாவெட்டி பூஜை செய்து ஒன்றாக சமைத்து ஒரே இடத்தில் சாப்பிடுகிறார்கள்.  சாதி கடந்து ஒற்று மையாக வாழும் மக்களிடையே கலகத்தை மூட்டிடும் விதமாகவே ,  ஒன்றிய அரசே உத்த ரவு போட்டு பிரிப்பது, அவர்களுடைய மனுவா தக் கொள்கை அடிப்படையில் ஆட்சியை தக்க வைக்கவும் நாடு முழுவதும் விரிவுபடுத்தவும் பயன்படுத்தவும் செய்யும் முயற்சியே! தேசம் முழுவதும் போராட்டம் வெடித்தது. இடதுசாரி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராடினார்கள்.  இப்படி தான் ஊரக வேலை திட்டம் மோடியின் அரசிடமிருந்து பாதுகாக்கப்பட்டது. ஆனாலும் பட்ஜெட்டில் 20% வரைக்கும் நிதியை ஒவ்வொரு ஆண்டும் குறைத்து இந்த திட்டத்தை சிதைப்பதையே பாஜக அரசு கொள்கையாகவே கொண்டி ருந்தது.  4 லட்சம் கோடி ரூபாய் குறைந்தபட்ச நிதியாக ஒதுக்கீடு செய்து முழுமையாக வேலையும் கூலியும் வழங்க வேண்டிய ஒன்றிய அரசின் நிதி பற்றாக்குறை காரணமா கவும், ஊதியம் கொடுப்பதை 3 மாதம் முதல் 5 மாதம் வரையில் நிலுவையில் வைத்து மாநிலங்களுக்கு தருவதன் காரணமாகவும், வேலை அமலாக்கத்தில் மாநில அதிகாரிக ளின் பாராமுகம் காரணமாகவும் தேசிய அள வில் 50 நாட்களுக்கும் குறைவாகவே வேலை தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச மாக 55 நாட்கள் மட்டுமே சராசரியாக வேலை தரப்பட்டுள்ளது. இந்த அளவீடுகளை இது வரையில் தாண்டி செல்ல முடியாமல் பாஜக அரசு பார்த்துக் கொள்கிறது. 

ஒரே நாடு, ஒரே சட்டம்... ஒரே கூலி தருவார்களா? 

ஒன்றிய அரசின் சட்டப்பூர்வ வேலை யாக இருந்தாலும் மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு விதமான கூலியாக வழங்கப்படு கிறது. ஒன்றிய அரசு மாநிலங்களில் வழங்க  அறிவிக்கும் கூலி கூட தமிழகத்தில் எந்த ஒரு ஊராட்சியிலும் முழுமையாக வழங்கப்பட வில்லை. நாடு முழுவதும் பெரும்பாலும் உணவுப் பொருட்களின் விலையும், அன்றாட தேவையும் ஒன்றாக இருக்கிற போது ஒன்றிய அரசு செயல்படுத்தும் திட்டத்தில் நாடு முழுவதும் ஒரே கூலி தர வேண்டாமா?  தமிழ்நாட்டில் ரூ.273 சட்டக் கூலி நடை முறையில் இருந்தும் 35% வரையில் கூலி வெட்டு செய்யப்படுகிறது.  இதன் காரணமாக தொழிலாளர்களின் குடும்பங்கள் வாங்கும் சக்தி குறைந்து பசி பட்டினி தொடர்கிறது. 

விளிம்பு மக்களின் தற்கொலையை தடுத்த வேலை

கொரோனா 19 பெருந் தொற்று காலத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர் குடும்பங்கள், பல பெரு நகரங்களிலிருந்து உயிர் பிழைத்துக் கொள்ள சொந்த கிராமங்க ளுக்கு வந்தவர்களுக்கு வேலை கொடுத்து சிறிது வருவாய் தந்தது ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்.  பெரு வெள்ளம், புயல், சுனாமி, வறட்சி போன்ற பேரிடர்க் காலங்க ளில் கூடுதலாக 50 நாட்களுடன் வேலை தந்து கிராமப்புற பொருளாதாரத்தில் மறுசுழற்சி யை ஏற்படுத்தி கிராமப்புற உழைப்பாளி மக்க ளின் தற்கொலையை பெருமளவில் தடுத்திட்ட நூறு நாள் வேலைத் திட்ட தொழி லாளர்களை சாதிவாரியாக பிரிவினை செய்து சண்டைப் போட அனுமதிக்கலாமா? 

தொழிலாளர்கள் போராட்டத்தால் பணிந்த பாஜக அரசு

நாடு முழுவதும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்,  தீண்டாமை ஒழிப்பு முன்னணி (DSSM) மற்றும் பல்வேறு கிராமப்புற அமைப்புகளை திரட்டி போராடி னோம். ஜூன் 21 நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் செய்தோம்.  தொடர்ந்து வட்ட மேஜை மாநாடுகள் நடத்தி அனைத்து பகுதி தொழிலாளர்களிடத்திலும் பிரச்சாரமாக கொண்டு சேர்த்தோம். செப்டம்பர் 17 பெரியார் பிறந்த தினத்தில் ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் பங்கேற்கும் போராட்டங்களை முன்னெடுத்தோம். ஊராட்சி அளவில் எங்கெல்லாம் சாதியாக பிரிவினை செய்து வேலையும் கூலியும் வழங்கப்படுவது வெளியே தெரிந்ததோ அங்கெல்லாம், ஊராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போ ராட்டம் நடத்தினோம். அக் 02 மகாத்மாகாந்தி பிறந்த நாளில், பெரும் மக்கள் திரளோடு கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று, சாதிய பிரிவினை செய்யும் பாஜக ஒன்றிய அரசின் உத்தரவை திரும்பப் பெற தீர்மா னங்கள் நிறைவேற்றி , மாவட்ட ஆட்சியர் கள் மூலம் ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இந்த பின்னணியில் தான் பாசிச பாஜக அரசு தனது உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது.  இத்தகைய நடவ டிக்கை அகில இந்திய விவசாய தொழிலா ளர்கள் சங்கம், அகில இந்திய அளவில் அனைத்து கிராமப்புற அமைப்புகளையும், தலித் அமைப்புகளையும் ஒன்றிணைத்த 5 மாதங்களாக தொடர்ந்து நடத்திய போருக்கு கிடைத்த வெற்றியாகும். மோடி அரசு இறுமாப்போடு காழ்ப்பு ணர்ச்சியுடன் செயல்படுவதால் அந்த அரசை ஒன்றும் அசைக்க முடியாது என்போருக்கு,  “அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்” என்பதை மட்டும் சொல்லி வைப்போம்!

கட்டுரையாளர் : மாநிலச் செயலாளர். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்
 

;