tamilnadu

img

குமரியில் நவ.5, 6, 7 சிஐடியு மாநில மாநாடு

நாகர்கோவில், ஆக.18- இந்திய தொழிற்சங்க மையம்  என்கிற சிஐடியுவின் 15 ஆவது மாநில மாநாடு கன்னியாகுமரியில் நவம்பர் 5,6,7 தேதிகளில் நடைபெற உள்ளது. மாநாட்டின் ஒரு பகுதியாக 6 ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்கும் பேரணியும் நடைபெற உள்ளது. மாநாட்டுப்பணிகளுக்காக 512 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் கடந்த செவ்வாயன்று (ஆக.16) நடந்த வரவேற்புக்குழு அமைப்பு கூட்ட த்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் பி.சிங்காரன் தலைமை வகித்தார்.  மாநில தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகு மாறன், செயலாளர்கள் கே.ஆறு முகநயினார், எஸ்.ராஜேந்தி ரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மகாசன்னிதானம் பாலபிரஜாபதி அடிகளார், ஜனாப் எச்.முகமது அலி, அருட்பணி மரியவின்சென்ட் உள்ளிட்டோர் பேசினர். சிஐடியு மாநில மாநாட்டின் புர வலர்களாக மகாசன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார், நாகர்கோ வில் மாநகர மேயர் ரெ.மகேஷ், எச்.முகமது அலி. அருட்பணி மரிய வின்செண்ட், கவுரவ ஆலோசகர் களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.நூர்முகமது, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி,  ஆர்.லீமாறோஸ், வங்கி அதிகாரிகள் சங்க முன்னாள் தலைவர் டி.தாமஸ் பிராங்கோ, அருட்பணி அமிர்தராஜ் தேர்வு செய்யப்பட்டனர்.

மதிப்புறு தலைவராக ஏ.பெல்லார்மின், தலைவராக ஜி.செலஸ்டின், செயல் தலைவ ராக பி.சிங்காரன், செயலாளராக கே.தங்கமோகனன், பொருளா ளராக பேராசிரியர் டி.நாகராஜன், நிதி காப்பாளராக எம்.சித்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 44 துணை தலைவர்கள், 44 துணை செயலாளர்கள் மற்றும் 103 செயற்குழு உறுப்பினர்கள் உட்பட 512 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

;