திருநெல்வேலி, அக்.7- தமிழகத்தில் மழைப்பொழிவு மற்றும் வானிலை நிலவரங்களை உடனுக் குடன் தெரிந்து கொள்வது தொடர்பாக, தமிழ கம் முழுவதும் 1,400 தானி யங்கி மழை மானிகள் மற்றும் 100 தானியங்கி வானிலை நிலையங் கள் அமைக்க, வரு வாய் மற் றும் பேரிடர் மேலாண்மை துறை வாயிலாக பணிகள் நடை பெற்று வந்தது. இந்நிலையில் அனைத்து பணிகளும் முடிவடைந்து தற்போது தமிழகத்தில் 1262 இடங்களில் தானியங்கி மழைமானி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மீதமுள்ள இடங்களிலும் மழைமானி பணிகள் முடி வடைந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் 350க்கும் மேற் பட்ட இடங்களில் புதிய தானியங்கி மழை மானி அமைக்கப்பட்டிருக்கிறது. குற்றாலம், பூலான்குடியிருப்பு, சிவசை லம், செங்கோட்டை, சொக்கம்பட்டி, கடைய நல்லூர், ஆலங்குளம், மேலதிருச்செந் தூர், காயல்பட்டினம், மணப்பாடு, வேம்பார், ஏரல், குட்டம், திசையன் விளை, மானூர் உள் ளிட்ட 350க்கும் மேற்பட்ட தென் தமிழக இடங்களில் மழைமானி அமைக்கப்பட்டு தற்போது அவைகள் பயன்பாட்டுக்கு வந்து உள்ளது. இதுபேரிடர் மேலாண்மை நடவ டிக்கைகளுக்கு உதவியாக இருக்கும். மேலும் வெள்ளப்பெருக்கு பெருமழைக் காலங்களில் மிக பயனுள்ளதாக இருக்கும். அணைக்கு வரும் நீர்வரத்தையும் மதிப்பிட முடியும். மாஞ்சோலை, காக்காச்சி,ஊத்து, குதிரைவெட்டி, சதுரகிரி, போடி உள் ளிட்ட தென் தமிழக மலைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மழைமானிகள் மட்டும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. விரை வில் மலைப்பகுதி மழை மானிகளும் பயன் பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.