tamilnadu

img

பீகாரில் இன்று கடைசிக் கட்ட வாக்குப் பதிவு 3.7 கோடி வாக்காளர்கள்; 1,302 பேர் களத்தில் உள்ளனர்

பீகாரில் இன்று கடைசிக் கட்ட வாக்குப் பதிவு 3.7 கோடி வாக்காளர்கள்; 1,302 பேர் களத்தில் உள்ளனர்

பாட்னா 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநி லத்தில் நவம்பர் 6ஆம்  தேதி 121 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. 65.08 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளில் செவ்  வாய்க்கிழமை அன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 122 தொகுதிகளில் மொத்தம் 1,302 பேர்  போட்டியிடுகின்றனர். இதில் 136  பேர் பெண்கள் ஆவர். வாக்குப்  பதிவு நடைபெறும் 20 மாவட்டங்க ளில் 3.7 கோடி வாக்காளர்கள் உள்ள னர். இதில் 1.95 கோடி ஆண்கள், 1.74 கோடி பெண்கள், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 943 பேர்  அடங்குவர். மொத்தம் 45,399 வாக்  குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள் ளன. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடை பெறும். சில மிகப் பாதுகாப்பு அவ சியம் உள்ள பகுதிகளில் மாலை  4 மணிக்கே வாக்குப்பதிவு முடி வடையும் என தெரிவிக்கப்பட்டுள் ளது. வாக்குச் சாவடிகளின் பாது காப்பிற்காக துப்பாக்கியுடன் கூடிய  துணை ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் நேபாள எல்லை வழியாக சட்ட விரோத நுழைவுகளைத் தடுக்கும்  வகையில் எல்லை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வாக்கு எண் ணிக்கை நவம்பர் 14ஆம் தேதி நடை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.