tamilnadu

img

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா ரூ.2.5 கோடிக்கு புத்தகம் விற்பனை

புதுக்கோட்டை, ஆக.8 - புதுக்கோட்டை புத்தகத் திருவிழா எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாச கர்கள், மாணவர்கள், பொதுமக்களின் பேராதரவுடன் ரூ.2.5 கோடி அளவுக்கு விற்பனை இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 5 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை ஜூலை 29 முதல்  ஆகஸ்ட் 7 ஆம் தேதிவரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தியது. புதுக்கோட்டை மாவட்டம் மட்டு மல்லாது, தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து எழுத்தாளர்கள், கலை ஞர்கள், வாசகர்கள், மாணவர்கள், பொது மக்கள் என அனைத்துத் தரப்பினரும் பத்து நாட்களும் புத்தகத் திருவிழாவை நோக்கி படையெடுத்து வந்தனர். காலை யில் மாணவர்களுக்கான அறிவியல் நிகழ்ச்சிகள், விஞ்ஞானிகளுடன் கலந்து ரையாடல், கோளரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புத்தகத் திருவிழாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.

முதல் நாள் மாலையில் நடைபெற்ற இலக்கியச் சொற்பொழிவில் ஒடிசா  மாநில முதல்வரின் சிறப்பு ஆலோச கர் ஆர்.பாலகிருஷ்ணன் உரையாற்றி னார். தொடர்ந்து தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திரைக்கலை ஞர் ரோகிணி, ஊடகவியலாளர் க.கார்த்திக் கேயன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் க.பாலபாரதி, விஞ்ஞானி த.வி.வெங்க டேஸ்வரன், பேராசிரியர் கோ.ப.நல்ல சிவன், பேராசிரியர் அப்துல்காதர், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, மேனாள் துணைவேந்தர் சொ.சுப்பையா, திட்டக்குழுத் துணைத் தலைவர் ஜெய ரஞ்சன், நாட்டியக்கலைஞர் நர்த்தகி நடராஜ், ஊடகவியலாளர் கோபிநாத் என இறுதியாக நீதியரசர் சந்துருவின் சிறப்புரையோடு புத்தகத் திருவிழா நிறைவு பெற்றது. சிறந்த நூல்களுக்கான விருதுகள் வழங்கல், பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கல், புத்தகங்கள் வெளியீடு, சாதனையாளர்கள் கவுரவிப்பு, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் என தொடர்ந்து புத்தகத் திருவிழாவை நோக்கி வாசகர்களை கவர்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதுகுறித்து புத்தகத் திருவிழாக் குழுவின் தலைவரும், மாவட்ட ஆட்சியரு மான கவிதா ராமு பேசுகையில், புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு உண்மையிலேயே இது ஒரு முக்கிய மான திருவிழா. பத்து நாட்கள் நடைபெற்ற புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் ரூ.2.5 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை யாகியுள்ளன. ஒரு லட்சம் பொதுமக்க ளும், ஒரு லட்சம் மாணவ, மாணவிகளும் புத்தகத் திருவிழாவுக்கு வந்து சென்றுள்ள னர். கோளரங்கத்தை 25 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர் என்றார்.

‘கருத்துப் பெட்டகத்தை மூடுவது பாசிசமே’: நீதியரசர் சந்துரு

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை அவர் பேசியதாவது: நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தா ர்கள் என்பதை பற்றிப் படிக்கும்போது அறிவு விசாலப்படுகிறது. நல்லவற்றை எடுத்துக் கொண்டு வேண்டாததை விட்டு விடலாம். அப்படித்தான் புத்தகங்களைப் பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் கதர் நூலை நூற்று அதனை மாலையாக்கி போடுவார்கள். கதர் துண்டு போடுவார்கள். இப்போது, எப்படி வந்தது இந்த சம்பிரதாயம் எனத் தெரியவில்லை, ஏதாவது பழம் கொடுக் கிறார்கள், பூ கொடுக்கிறார்கள், பயன் கடுத்த முடியாத சால்வை போடுகிறார்கள். இந்தச் சூழலில் என்னைச் சந்திக்க வரு வோர் புத்தகங்களை மட்டும் வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். அந்தப் புத்தகங்களை பல்வேறு நூலகங்களுக்கு மடைமாற்றி விடுகிறார். இதனால் பல நூலகங்கள் செழித்து வருகின்றன.

எங்களின் மாணவர் பருவத்தில் புத்தகங்களைப் படிக்க மிகுந்த சிரமப் படுவோம். நூலகத்தில் சில நூல்களைத் தேடி வைத்தால், மறுநாள் வேறொருவர் எடுத்துப் படித்துக் கொண்டிருப்பார். சிறை யில் சிறைவாசிகளுக்கு செய்தித்தாள்கள் வழங்க வேண்டும் என்பதையும், சிறை வாசிகளுக்கு புத்தகங்களை வாசிக்க வழங்க வேண்டும் என்பதையும் நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகுதான் பெற்றுத்தர முடிந்தது. கல்வி கற்பது அடிப்படை உரிமை என்றான பிறகு, எந்த நூலையும் படிக்கக் கூடாது என்று யாரும் தடுக்க முடியாது. கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூலகத்தை திறப்பதற்கு முன்பே மாணவர்கள் கூடி நிற்பார்கள். அத்தனை முக்கியமான நூலகத்தை மாற்றி மருத்து வமனையாக்க முயற்சித்தார்கள். அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பார்கள். நான் நீதிபதியாக இருந்தபோது அந்த முடிவுக்கு இடைக் காலத் தடை விதித்தேன். கருத்துப் பெட்ட கத்தை மூடுவார்கள் என்றால் அது பாசிசம்.

இணையதள தகவல் புரட்சி ஏற்பட்டுள்ள இந்தக் காலத்தில் அச்சிட்ட நூல்கள் என்ன ஆகும் என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது. இந்நிலையில் நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்குவதற்காக தமிழ்நாடு முதல்வர் எடுத்த நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது.  ஜெர்மனி நாட்டு நூலகத்திலுள்ள சில  நூல்களை அழித்தார்கள். யாழ்ப்பாண த்தில் நூலகம் தீயிட்டு அழிக்கப்பட்டது. ஒரு மொழியை, அந்த மொழியால் உரு வான நாகரீகத்தை ஒழிக்கவேண்டும் என்பதற்காக இதனைச்செய்தார் கள்.’அறியப்படாத கிறிஸ்தவம்’ என்ற ஆய்வு நூலை மாவட்ட ஆட்சியர் கவிதா  ராமு, முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கிய தற்காக சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஓர் ஆய்வு நூல் மீது ஏன் இத்தனை எதிர்ப்பு வர வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட இந்த நாட்டில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதைத்தான் படிக்க வேண்டும், இதைத்தான் செய்ய வேண்டும் என  மக்களைக் கட்டுப்படுத்துவது பாசிசம்.  எந்தக் காலத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் கருத்துரிமையை விட்டுத் தர மாட்டோம். கருத்துரிமையை யார் தடுத்தாலும் எதிர்த்துக் கேட்போம்” இவ்வாறு அவர் பேசினார்.

;