மாணவி கீர்த்தனாவுக்கு முத்தரசன் அஞ்சலி
பெரம்பலூர், ஆக.12-நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட பெரம்பலூர் மாணவி கீர்த்தனாவின் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தர சன், மாணவியின் பெற்றோர்களிடம் ஆறுதல் கூறினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் பேசினார். நீட் தேர்வு விலக்கை பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தமிழக அரசு கூறிக் கொண்டு நீட் தேர்வு பிரச்சனையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து வருகிறது. மாநில அரசு மாணவர்களை பற்றி கவலைப்படவில்லை. நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியா மல் இதுவரை 7 பேர் இறந்துள்ளனர். நீட் தேர்வால் இறந்து போனவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும். வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மீண்டும் சட்டசபையில் நீட் தேர்விற்கான விலக்கு அளிக்க கோரி மீண்டும் மசோதா தாக்கல் செய்து நீட் தேர்வு விலக்கு பெற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்று கூறினார். பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கட்சி என்.செல்லதுரை, வட்டச் செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம், சிபிஐ மாவட்டச் செய லாளர் வீ.ஞானசேகரன், முன்னாள் மாவட்டச் செயலாளர் வேணுகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.
சாலை விபத்தில் ஒருவர் பலி
தஞ்சாவூர், ஆக.12-புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா குளமங்க லம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னக்கன்னு(56) விவ சாயி. இவர் தஞ்சாவூரில் உள்ள உறவினர்களுக்கு மொய் பத்திரிக்கை கொடுப்பதற்காக ஒரு மொபட்டில் திருச்சிற்றம் பலத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்து ஒரு கார், மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சின்னக்கண்ணு புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பல னின்றி இறந்தார். இது குறித்து திருச்சிற்றம்பலம் காவல்துறை யினர் வழக்கு பதிந்து கார் விபத்து ஏற்படுத்திய அறந்தாங்கி யைச் சேர்ந்த ஆத்மநாதன் என்பவரை தேடி வருகிறார்கள்.