tamilnadu

img

தோல்வி பயத்தில் உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்தவில்லை

 விக்கிரவாண்டி:
தோல்வி பயத்தில் அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் அக்டோபர் 21 அன்று  நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவேட்பாளர் நா.புகழேந்திக்கு ஆதரவு கேட்டு, நடைபயணம் மற்றும் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார்.பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பலபிரச்சனைகளைச் சொன்னீர்கள். முக்கியமாக பட்டா பிரச்சனை, குடிநீர்ப் பிரச்சனை, சாலை வசதி பிரச்சனை, சுகாதாரச் சீர்கேடு பிரச்சனைகள், பேருந்து வசதி என இப்படி அன்றாடம் இருக்கும் பிரச்சனைகளை எடுத்துக் கூறினீர்கள். இது ஒன்றும், நிறைவேற்றுவதற்குக் கடினமானபெரிய பிரச்சனைகள் கிடையாது. கடந்த 8 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. நீங்கள்கூறிய இந்தப் பிரச்சனைகளை எல்லாம் இந்நேரம் நிறைவேற்றியிருக்க வேண்டும் அல்லவா! அதற்கு, உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்தியிருக்க வேண்டும். உங்கள்ஊருக்கென்று ஒருகவுன்சிலர், பிரசிடெண்ட்,சேர்மன் இருந்தார்கள் என்றால், இவற்றையெல்லாம் அவர்களே செய்து முடித்துவிடுவார்கள். நீங்கள்கூறிய அனைத்து பிரச்சனைகளும் உள்ளாட்சி அமைப்பின் மூலம் செய்து முடிக்கப்படக்கூடிய வேலைகள் தான்.கடந்த 8 வருடமாக உள்ளாட்சித் தேர்தலையே இந்த ஆட்சி நடத்தவில்லை. ஏனென்றால், உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் திமுக வெற்றி பெற்றுவிடும். அதிமுக தோற்றுவிடுவோம் என்று, நடத்தாமல் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

;