tamilnadu

img

ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் தமிழுக்குப் பதிலாக இந்தியா?

சென்னை, ஜூலை 19 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் முறைக்குப் பதிலாக 2019 ஜனவரி முதல் பயோ மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப் பட்டு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. பயோமெட்ரிக் பதிவுக் கருவியில் ஆசிரியர்கள், ஆசிரியர்களல்லாத பணியாளர்கள் சார்ந்த விவரங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது தமிழை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக இந்தி மொழியில் பதிவேற்றங்கள் மாற்றம் செய்யப்பட் டுள்ளன. அனைத்துத் துறைகளிலும் மத்திய பாஜக அரசு நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்தி திணிக்கப்படுவ தென்பது தொடர்கிறது. இதுபற்றி தட்டி கேட்க வேண்டிய அதிமுக அரசும் வாயை மூடிக் கொண்டு, கண்டும், காணாமலும் இருந்து வருவது நியாயமற்றது. எனவே, ஆசிரியர்கள் வருகைப்பதிவேட்டில் உள்ள பயோ மெட்ரிக் முறையில் இந்தி மொழியை நீக்கி தமிழ்  மொழியை மீண்டும் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.