tamilnadu

img

திருச்சி NIT-ல் வேலைவாய்ப்பு

திருச்சி NIT-யிலுள்ள உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியின் பெயர்: Assistant Professor (Grade - II)
காலியிடங்கள்: 147 (துறை வாரியான காலியிட விபரம் இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது.)
கல்வித்தகுதி: காலியிடம் ஏற்பட்டுள்ள துறை சார்ந்த பாடப்பிரிவில் NIT விதிமுறைப்படி கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கல்வித்தகுதி குறித்த விரிவான விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


வயதுவரம்பு: 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ ST/ OBC பிரிவினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது/ OBC பிரிவினர்களுக்கு ரூ.1000. SC/ ST/ PWD/ பெண்கள் பிரிவினர்களுக்கு ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.nitt.edu என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 9.12.2019.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.