tamilnadu

img

இந்தியாவில் கொரோனா பலி 3 ஆயிரத்தைத் தாண்டியது....

புதுதில்லி, மே 18 - கொரோனா வைரஸ் பரவலை தடுக்க  நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 56-நாட்கள் ஆகி யுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா வைரஸ் கட்டுப்பாடுக்குள் வராததால், ஊரடங்கை மேலும் 14 நாட் கள் நீட்டித்து ஞாயிறன்று மத்திய அரசு உத்தரவிட்டது.  கொரோனா பரவல் குறைவான இடத்தில் சில தளர்வுகளை விதித்து, வரும் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தர விட்டுள்ளது. இந்தநிலையில் மாநில அரசு களுக்கு, மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ஊரட ங்கை நீர்த்துப்போக செய்யும் செயல் களை அனுமதிக்கக் கூடாது  தேவைப் பட்டால் ஊரடங்கை கடுமையாகப் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சரவை செயலகம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக உள்துறை செயலர் அஜய்பல்லா எழுதியுள்ள கடிதத்தில், “உள்துறை அமைச்சக வழிகாட்டுதல் களின் கீழ் விதிக்கப்பட்டுள்ள கட்டுப் பாடுகளை மாநிலங்கள், யூனியன் பிர தேசங்கள் தளர்த்த முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்பவில்லை. நிலைமையை ஆராய்ந்து பல்வேறு மண்டலங்களில் வேறு சில நட வடிக்கைகளைத் தடைசெய்யலாம் அல் லது அவசியமானதாகக் கருதப்படுவது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க லாம்” என்று தெரிவித்துள்ளார்.

பலி அதிகரிப்பு
கொரோனா பாதிப்பின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதுநாள்வரை இல்லாத அளவுக்கு 5 ஆயிரத்து 242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 157 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரி வித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் இந்தியா வில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட் டோர் எண்ணிக்கை 96 ஆயிரத்து 169  ஆக அதிகரித்துள்ளது. குணமடைந் தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 824 ஆகவும், மருத்துவமனையில் சிகிச்சை  பெறுவோர் எண்ணிக்கை 56 ஆயிரத்து 316 ஆக அதிகரித்துள்ளது. உயிரி ழந்தோர் எண்ணிக்கை 3ஆயிரத்து 29 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் நிகழ்ந்த  157 உயிரிழப்புகளில் மகாராஷ்டிராவில் 63 பேர், குஜராத்தில் 34 பேர், மேற்கு வங்கத்தில் ஆறு பேர், தில்லியில் 31 பேர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் தலா ஐந்து பேர், தமிழகத்தில் நான்கு  பேர், பஞ்சாப்பில் மூன்று பேர், ஹரி யானா, ஆந்திரா, பீஹார், கர்நாடகா, ஒடிசா, ஜம்மு காஷ்மீரில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர்.

கர்நாடகம்
கர்நாடகாவில் திங்களன்று மட்டும் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநி லத்தில் பதிவான எண்ணிக்கையில் இது மிகவும் அதிகம். இதன் மூலம் மாநிலத்தில் 1231 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் திங்களன்று நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 52 பேருக்கு தொற்று இருப் பது கண்டறியப்பட்டுள்ளது. 150  புலம்பெயர்ந்தோரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 2,432 பேர் பாதிக்கப்பட்டுள்ள னர். கொரானாவிற்கு இராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா நகரில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழப்பு 133 ஆக அதிகரித்துள்ளது. திங்களன்று 140 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,342 ஆக உள்ளது என மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பீகாரில் கொரோனா தொற்றால் திங்கள் நிலவரப்படி 1,326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டுப்பேர் உயிரிழந்துள்ளனர்.  ஒடிசாவில் 876 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். நான்கு பேர் உயிரிழந்துள் ளனர். மும்பையில் பிரபல இந்தி நடிகர் நவாசுதீன் சித்திகி மற்றும் அவ ரது குடும்பத்தினர் வீட்டுத் தனிமைப் படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஒப்போ ஊழியர்களுக்கு சோதனை
சீன கைபேசி நிறுவனமான ஒப்போ ஞாயிற்றுக்கிழமை தனது நொய்டா தொழிற்சாலையின் செயல்பாடுகளை நிறுத்தியது. சுமார் 30 சதவீத ஊழி யர்களுடன் இயங்க உத்தரபிரதேச அர சிடம் அனுமதி பெற்ற இந்த நிறு வனம் வெள்ளிக்கிழமை மீண்டும் நட வடிக்கைகளைத் தொடங்கியது. இதை யடுத்து கொரோனா வைரஸ் சோத னைக்குப் பின் பணியில் சேர வேண்டிய சுமார் மூன்றாயிரம் ஊழியர்களின் மாதிரியையும் சோதனைக்காக ஒப்போ அனுப்பியுள்ளது.

;