tamilnadu

img

பாஜக பிரச்சாரத்தில் திரண்ட பெருங்கூட்டம்!

புதுதில்லி, ஏப்.16-பாஜகவின் தேர்தல்பிரச்சாரக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோஒன்று இணையதளத் தில் வைரலாகி இருக்கிறது.இந்த வீடியோ, வட இந்தியாவில் நடந்த பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அதில், பாஜகவைச்சேர்ந்த உள்ளூர் தலைவர்கள், தங்கள் கட்சிக்கு வாக்குசேகரித்து, கர்மசிரத்தையுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அவர்களின் பேச்சை மக்கள் ஒருவர் கூட நின்றுகேட்கவில்லை. மக்கள் உட்காரும் இடம் முழுக்க காலியாக இருக்கிறது. ஒரு சிலர் ஓரமாக நிற்கின்றனர். ஆனால், ஆச்சரியப்படத்தக்க வகையில், தெருநாய்கள் கூட்டமாக திரண்டு, பாஜகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்கின்றன. பாஜக-வினரும், நாய்களே ஆனாலும் சாதனைகளை சொல்லாமல் முடிக்கமாட்டோம் என்று இடைவிடாமல் பேசுகின்றனர்.இந்த வீடியோவை யாரோ இணையதளத்தில் பதிவேற்ற, அதைப் பலரும் பார்த்து சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.

;