tamilnadu

img

மணிப்பூரில் வீசிய பெரும் சூறாவளியால் கட்டிடங்கள் சரிந்ததில் 3 பெண்கள் பலி

மணிப்பூரில் வீசிய பெரும் சூறாவளியால் கட்டிடங்கள் சரிந்ததில் 3 பெண்கள் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மணிப்பூர் மாநில வானிலை மையத்தின் தகவலின்படி சுமார் 40கிலோமீட்டர் வேகத்தில் இந்த சூறாவளி காற்று வீசியுள்ளது. முக்கியமாக மணிப்பூர் மாநிலத்தின் மலை மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளை இந்த சூறாவளி தாக்கியுள்ளது. இதனால் பல வீடுகள், பள்ளி கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. புயலில் பல்வேறு மரங்கள் வேரோடு சாய்ந்தன மற்றும் மின்கம்பங்கள் பல சாய்ந்ததால் மாநிலத்தின் பல பகுதிகளில் மின்சார வசதி இல்லாமல் மக்கள் பலர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


இந்த புயலால் கே சாலெம்ஜங் கிராமத்தில் வீட்டுக்கூரை சாய்ந்து 2 பெண்கள் மற்றும் காங்சிங் மாவட்டத்தில் டீ கடை நடத்தி வந்த யங்கோம் என்ற ஒரு பெண்ணும் பலியாகியுள்ளனர். மேலும், மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் புயலால் காயமடைந்த சுமார் 50க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலும் மாணவர்கள் என கூறப்படுகிறது.


;