tamilnadu

img

புதுச்சேரி அரசியல் களத்தில் புதிய திருப்பம்....  பாஜக கூட்டணியிலிருந்து விலகியது  என்.ஆர்.காங்... ???

புதுச்சேரி 
புதுச்சேரியில் துணை ஆளுநர் கிரண் பேடியின் பல குடைச்சல் மற்றும் எதிர்ப்புகளை சமாளித்து நன்றாக ஆட்சி செய்து காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை கவிழ்த்தது பாஜக. முதல்வர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அமைச்சரவை கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில், ஆட்சிக் கவிழ்ப்புக்கு உறுதுணையாக இருந்த என்.ஆர். காங்கிரஸ் கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.  இதற்கு காரணம் புதுச்சேரியில் பாஜக தலைமையில் ஆட்சி அமையும் என அமித்ஷா பேசியிருப்பது தான். எங்களை அழைத்து ஆலோசிக்காமல் பாஜகவின் இப்படி அறிவித்திருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நாங்கள் (என்.ஆர். காங்கிரஸ்) விலகுவது என முடிவு எடுத்துள்ளதாம். 
என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு புதுச்சேரி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

;