tamilnadu

img

கிரண்பேடியை திரும்பப் பெறுக... புதுச்சேரியில் தொடர் போராட்டம்.... ராணுவத்தை நிறுத்தி மோடி அரசு மிரட்டல்....

புதுச்சேரி:
 மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து போட்டி அரசாங்கம் நடத்தும் புதுச்சேரி  துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறக்கோரி காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்கள் சார்பில்தொடர்போராட்டம் வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 8) தொடங்கியது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒப்புதல்அளிக்க மறுத்து போட்டி அரசாங்கம்நடத்தி வரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை, மத்திய பாஜக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். புதுச்சேரியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல்வேறு ஜனநாயக அமைப்புகள் சார்பில் இப்போராட்டம் நடைபெறுகிறது.

புதுவையை புறக்கணிக்கும் மோடி  அரசு
புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள அண்ணாசிலைஅருகே நடைபெற்ற போராட்டத் திற்கு காங்கிரஸ்  கட்சியின் பிரதேச தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி போராட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசுகையில், மத்திய அரசு புதுவையை புறக்கணிக்கிறது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாநில வளர்ச்சியைத் தடுக்கிறார். கடந்த நாலரை ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். மத்தியில் உள்ள பா.ஜக அரசு தமிழகம், புதுவை மக்கள் ஏற்காத பல திட்டங்களை நம் மீது திணித்து வருகின்றனர்.

ராணுவத்தை வைத்து மிரட்டல்
மாற்றாந்தாய் மனப்பான்மை யோடு நாம் வைக்கும் கோரிக்கைகளைச் செவிகொடுத்துக் கேட்பதில்லை. புதுவைக்குத் தர வேண்டியநிதி மானியங்களைத் தருவதில்லை. தற்போது நமது போராட்டத்தைத் தடுப்பதற்காக ராணுவத்தைக் கொண்டுவந்து மிரட்டுகின்றனர்.

புறவாசல் வழியாக ஓடியவர்
நம் நாட்டில் ஆளுநர், துணைநிலை ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் போராடிய சரித்திரமே கிடையாது. ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தியபோது மறுநாளே பின்புறம் வழியாகத் தில்லிக்கு ஓடியவர்தான் கிரண்பேடி. தில்லியில்  மத்திய உள்துறைஅமைச்சரைச் சந்தித்து என்னை யும், அமைச்சர்களையும் கைது செய்யவேண்டும். போராட்டத்தைத் தடுக்கவேண்டும் என கிரண்பேடி கோரிக்கைவைத்தார். ஆனால் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆட்சியாளர்கள் போராட்டம் நடத்தும்போது, தில்லியில் உங்களுக்கு என்னவேலை? எனதிருப்பி அனுப்பினார். பின்னர் புதுவைக்கு வந்த கிரண்பேடி பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை ஏற்பதாக உறுதிமொழி அளித்து போராட்டத்தைக் கைவிடச் செய்தார்.ஆனால் 4 மணி நேரப் பேச்சு வார்த்தையில் ஒத்துக்கொண்டதை கிரண்பேடி செய்யவே இல்லை.

அமைச்சரவை முடிவை உதாசீனப்படுத்தும் ஆளுநர்
 மத்திய அரசிடம் போராடிப் பெற்ற நிதி அதிகாரத்தைக்கூட வழங்கவில்லை. அமைச்சரவையில் முடிவெடுத்து அனுப்பினாலும் அத னையும் கண்டுகொள்ளவில்லை. புதுவை மக்களின் உரிமைகளை, நலன்களைப் பாதுகாக்கும் பொறுப்பும், கடமையும் நமக்கு உள்ளது.உயிர்த் தியாகம் செய்தேனும் உரிமைகளைக் காப்போம். இதற்காக 4 நாட்கள் அல்ல, எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் போராடத் தயாராக உள்ளேன்.

புதுவையின் உரிமையைக் காப்போம்!
படிப்படியாகப் புதுவையைத் தமிழகத்தோடு இணைப்பதற்காக மோடியும், பேடியும் பல்வேறு சதிகளைச்செய்கின்றனர். ஆளுநரின் நடவடிக்கைகளுக்குப் பிரதமர் மோடி உறுதுணையாக உள்ளார். தற்போது அவருக்கு ஒரு விண்ணப்பம், கோரிக்கை விடுக்கிறேன். ஆளுநரை உடனடியாக திரும்பப்பெறுங் கள். கிரண்பேடியை உடனடியாக புதுவையை விட்டு வெளியேற்றுங் கள். புதுவையின் உரிமைகளைப் பாதுகாக்கப் பீரங்கியே வந்தாலும் நாங்கள் அஞ்சமாட்டோம். இந்தபோராட்டத்திற்குப் பேராதரவுதந்திருக்கும் அனைத்துக்கட்சியின ருக்கும் பாதம் தொட்டு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். புதுவையைக் காப்பாற்ற, மீட்க எந்தவித தியாகமும் செய்யத் தயாராவோம்.இவ்வாறு அவர் பேசினார்.போராட்டத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் தத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம்,முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாரா கலைநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சுதா சுந்தரராமன், பிரதேசசெயலாளர்  ராஜாங்கம், தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள், மூத்த தலைவர் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவபொழிலன், மதிமுக நிர்வாகி கபிரியேல், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் சோ.பாலசுப்பிரமணியன், ராஷ்ட்ரீய ஜனதா தளம் நிர்வாகி சஞ்சீவி மற்றும்மனிதநேய மக்கள் கட்சி, இந்தியக்குடியரசு கட்சி மற்றும் அமைச்சர் கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட  பல்வேறு ஜனநாயக  அமைப்பினர் பங்கேற்றனர்.

;