tamilnadu

img

அதிமுக ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னுக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு...

புதுக்கோட்டை:
அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில்தமிழகம் 50 ஆண்டுகள் பின்னுக்கு இழுத்துச்செல்லப்பட்டுள்ளது என்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஊனையூரில் திங்கள்கிழமை ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனும் பிரச்சாரத்தில் அவர் பேசியது:

மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, ஊழலாட்சி துறை அமைச்சராகிவிட்டார். தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் பாதுகாப்பான குடிநீர்கூடகிடைக்கவில்லை. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த 10 லட்சம் பேர் வேலையின்றி காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 7 வருடமாக வேலை வழங்கப்பட வில்லை. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு 45 வயதுவரை உள்ளவர்கள் மட்டுமே ஆசிரியர் தேர்வு எழுத முடியும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படும்.

கொரோனாவிலும் ஊழல் செய்தவர்சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர். இவர் மீது குட்கா ஊழல், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ரூ.89 கோடி பணபட்டுவாடா செய்தது போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்தில்கொரோனாவில் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதற்கும் பல்லாயிரக்கணக்கானோர் இறந்ததற்கும் விஜயபாஸ்கர்தான் காரணம். ஏனெனில், தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு வராது என்று சட்டப்பேரவையில் கூறியவர் இவர். மரணத்தில் பொய் சொன்னவர்தான் விஜயபாஸ்கர்.

10 ஆண்டுகளில் புதிய வேலை வாய்ப்பு, புதிய முதலீடு, மாநில உரிமை, நீட் தேர்வில்விலக்கு குறித்து கவனம் செலுத்தாமல், பணம் கிடைக்கும் திட்டங்களை மட்டுமேஆட்சியாளர்கள் தீட்டியதால், ரூ.5 லட்சம்கோடி கடனில் தமிழகம் மூழ்கடிக்கப்பட்டு விட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் கோரிக்கைகள் தீர்க்கப்படும். அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னால் இழுத்து செல்லப்பட்டுள்ளது. இந்திய அளவில் தமிழகத்தை அனைத்து நிலைகளிலும் முன்னேற்ற வேண்டும் என்பதுதான் திமுகவின் இலக்கு. அது நிச்சயம் நிறைவேறும்.  இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது பேச்சில் குறிப்பிட்டார்.முன்னதாக, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு துறைகளில்சாதித்த சாதனையாளர்கள் பாராட்டப் பட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுவாசலில் எரிபொருள் சோதனைக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை உள்ளடக்கிய வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.இதில், திமுக மாவட்டப் பொறுப்பா ளர்கள் எஸ்.ரகுபதி எம்எல்ஏ, கே.கே.செல்லப்பாண்டின், சட்டமன்ற உறுப்பினர்கள் பெரியண்ணன் அரசு, சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

;