tamilnadu

img

நெகிழி பொருட்கள் பறிமுதல்

 அறந்தாங்கி, ஜூலை 20- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி ஆணையர் வினோத் தலைமையில் 6 குழுக்கள் அமைக் கப்பட்டு 3665 கடைகளில் ஆய்வு செய்ததில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள தடை செய்த 3.5 டன் நெகிழி பொருட்கள் பறி முதல் செய்து ரூ.84 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக் கப்பட்டது. இனி நெகிழி பொருட்கள் வைத்திருக்கும் வியா பாரிகள் பிடிபட்டால் முதல் முறை ரூ10 ஆயிரம், 2ம் முறை 15 ஆயிரம், 3ம் முறை 25 ஆயிரமும் அபராதமாக வசூ லிக்கப்படும். 4வது முறை பிடிபட்டால் கடை உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. ஆய்வில் சுகாதார அலுவலர் முத்துகணேஷ், சுகாதார ஆய்வாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.