tamilnadu

img

கந்தர்வகோட்டை அருகே 7 கொத்தடிமைகள் மீட்பு....

புதுக்கோட்டை:
 புதுக்கோட்டை  மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கரும்பு வெட்டும்பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு குடும்பங்களை சேர்ந்த மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 7 கொத்தடிமைகள் புதன்கிழமை இரவு மீட்கப்பட்டனர்.  

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே பகட்டுவான்பட்டி கிராமத்தில் தாமரைச்செல்வன் என்பவருக்கு சொந்தமான கரும்புத் தோட்டத்தில் கொத்தடிமைகளாக சிலர் வேலை செய்வதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு  ரகசிய தகவல் வந்துள்ளது.  இந்தத் தகவலையடுத்து சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும்வருவாய்துறையினர், காவல்துறை யினர் உதவியோடு சம்பவ இடத்திற்குசென்று விசாரணை மேற்கொள்ளப் பட்டனர். விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலிருந்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கரும்பு வெட்டும் பணிக்காக அழைத்து வரப்பட்ட  இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 7 பேரையும் கரும்பு தோட்ட உரிமையாளர் தாமரைச்செல்வன் உறவினர் உயிரிழப்புக்கு அனுப்பாமலும் வாக்கு செலுத்த கூட அனுப்பாமல் இருந்ததாகவும் இதைக் கேட்டால் அடித்துதுன்புறுத்துவதாகவும் மேலும் வேலையை மட்டும் வாங்கிக்கொண்டு உணவு கூட கொடுக்காமல் கொத்தடிமையாக வேலை வாங்கியதாக தெரியவந்தது.

இதனையடுத்து அந்த ஏழு பேரையும் மீட்டு புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். மேலும், இவர்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து அவர்களுக்கு உரிய நிவாரணத்‌ தொகையை வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். மேலும்  பகட்டுவான்பட்டியில் இன்னும்சிலர் கொத்தடிமைகளாக பணிபுரிந்துவருவதாகவும் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் மேலும் கொத்தடிமை களாக வேலை வாங்கிய தோட்ட உரிமையாளர் தாமரைச்செல்வனை போலீசார் தேடி வருவதாகவும் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் தெரிவித்தார்.

;