tamilnadu

img

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 29 ஆம் தேதி வெளியீடு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9.96 லட்சம் மாணவர்கள் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 29ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

மாணவர்கள் தாங்கள் பதிவு செய்த செல்போன் எண் மூலம் தேர்வு முடிவுகளை குறுஞ்செய்தியாக பெற்றுக்கொள்ளலாம். மேலும், http://tnresults.nic.in என்ற தளத்திலும், தேர்வு எண், பிறந்த நாள் ஆகியவற்றை பதிவு செய்து மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம்.


;