tamilnadu

img

நாமக்கல் கொமதேக வேட்பாளரை ஆதரித்து சிபிஎம் பொதுக்கூட்டம்

நாமக்கல், ஏப்.7-

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கொமதேக வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குமரமங்கலத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் போட்டியிடுகிறார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் மல்லசமுத்திரம் ஒன்றியக் குழுவின் சார்பில் குமரமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகில் கொமதேக வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.கோமதி தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி, மாவட்ட குழு உறுப்பினர் பி.செங்கோடன், ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மேற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுந்தரம், குப்புசாமி, சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;