tamilnadu

img

நாகை வேட்பாளர் எம்.செல்வராஜூக்கு ஆதரவாக கே.பாலகிருஷ்ணன் பிரச்சாரம்

திருத்துறைப்பூண்டி, ஏப்.1-


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நாகை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் எம்.செல்வராஜூக்கு ஆதரவாகதிங்களன்று மாலை 5.30 மணியளவில் திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்திடம் வாக்குகள் சேகரித்து பிரச்சாரம் செய்தார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.குமாரராஜா, சி.ஜோதிபாசு, கே.என்.முருகானந்தம், ஜி.பழனிவேல், கே.தமிழ்மணி, சிபிஐ சார்பில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.உலகநாதன், ஆர்.ஞானமோகன், ஜோசப், திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ப.ஆடலரசன், ஆர்.எஸ்.பாண்டியன், பிரகாஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் வி.த.செல்வம், காங்கிரஸ் சார்பில் கோ.பாஸ்கர் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தோழர்கள், திராவிடகழக தோழர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு மற்றும் ஒன்றிய, நகரக்குழு தோழர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

;