tamilnadu

சாலை வசதி இல்லா வெள்ளமணல் கிராமம்

சீர்காழி, ஏப்.13-நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே வெள்ளமணல் மீனவ கிராமம் உள்ளது. இங்கு 100 குடும்பங்களைச் சேர்ந்த269 வாக்காளர் உள்ளனர். இக்கிராமத்திற்குச் செல்ல சுதந்திரமடைந்த காலத்திலிருந்து சாலை வசதி இல்லை. மேலும் இக்கிராமச் சாலை, வனத்துறை பகுதியில் உள்ளது. இதனாலும் சாலை அமைத்து தரப்டவில்லை. இதுகுறித்து பலமுறைகோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதைத்தொடர்ந்து இக்கிராம மக்கள், சாலை வசதி அமைத்து தர வேண்டும். இல்லையென்றால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து, அனைத்து வீடுகள் மற்றும் பொது இடங்களில் கருப்புக் கொடி ஏற்றி கடந்த ஒரு வாரமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் தேர்தல்நாளன்று ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை ஆர்.டி.ஓ.கண்மணி, மாவட்ட வன அலுவலர் கலாநிதி, சீர்காழி வனச்சரக அலுவலர் கருப்பன், கொள்ளிடம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன், ஒன்றிய ஆணையர் சுப்பையன் உள்ளிட்டோர் வெள்ளமணல் கிராம முக்கியஸ்தர் மற்றும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 7 மாதத்திற்குள் சாலை வசதிஅமைத்து தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மக்கள், போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

;