tamilnadu

img

பாம்பன் மீனவர் இருவர் பலி ஒருவர் கவலைக்கிடம்....

வேதாரண்யம்:
வேதாரண்யம் கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற போது கடலில் கிடந்த கேனில் இருந்தது சாராயம் என நினைத்து குடித்ததால் மீனவர்கள் இருவர் மரணமடைந்தார். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பகுதியில் தமிழ்நாட்டிலுள்ள வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்கி மீன் பிடிப்பது வழக்கம். இச்சூழ்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த 6 மீனவர்கள் மார்ச் 1 அன்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.கோடியக்கரை தென்கிழக்கு கடலில் 15 நாட்டிகல் தூரத்தில் மீன் பிடித்து விட்டு, கோடியக்கரைக்கு திரும்பி வரும் போது, ஞாயிறன்று (மார்ச் 7) அதிகாலை 2 மணி அளவில் மீன் வலைகளை எடுத்துக் கொண்டிருக்கும்போது, வலையில் சிக்கியிருந்த 3 லிட்டர் கேனை எடுத்து பார்த்து, அதில் சாராய வாடை வருவதை கண்டு அந்தோணி, போஸ், வினோத் மூவரும் குடித்துவிட்டு தூங்கி விட்டனர்.

காலை 5 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த மூவரையும் மற்ற மீனவர்களை எழுப்பியபோது, அந்தோணிஇறந்த நிலையில் இருந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், கரைக்கு கொண்டு வந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இதில் அந்தோணி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்ற இருவர் ஆபத்தான நிலையில் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த போஸ் என்கிற மீனவரும் மரணமடைந்தார். இதனால் கோடியக்கரை கடற்கரை பகுதியில் பதற்றமான சூழ்நிலை உள்ளது. 
இதுதொடர்பாக கோடியக்கரை வனத்துறையினர், வேதாரண்யம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

;