tamilnadu

img

அறுவடைக்கு தயாரான நெற்பயிர் நாற்றங்காலாக மாறியது..... துயரத்தில் விவசாயிகள்...

சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த சில தினங்களாகதொடர்ந்து மழை பெய்து வருகிறது.மழை நின்றுவிடும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் கொள்ளிடம் பகுதியில் சம்பா சாகுபடி செய்திருந்த நெற்பயிர்களின் பெரும்பகுதி தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டது. 

மீதமிருந்த நெற்பயிரை காப்பாற்றலாம் என்று விவசாயிகள் தீவிரம் காட்டிவந்தனர். ஆனால் விடாமல் மழை பெய்து கொண்டே இருப்பதால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் வயலில் சாய்ந்து முளைத்து நாற்றங் கால் போல் உள்ளது. இதனை அறிந்தவிவசாயிகள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். ஒரு ஏக்கர் சம்பா நெற்பயிர் சாகுபடிசெய்ய ரூ.25 ஆயிரம் வீதம் செலவுசெய்து சாகுபடி செய்திருந்தனர். ஆனால் கொஞ்சம் கூட பலனின்றி நெற் பயிர் வீணாகிவிட்டது. கொள்ளிடம் அருகே உள்ள கூத்திதியம்பேட்டை, வைரவன்இருப்பு, வைரவநிருப்பு ஏரி, சீயாளம் ஆகிய கிராமங்களில் சாகுபடி செய்திருந்த சுமார் 800 ஏக்கர் சம்பா அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. ஆனால் மழையால் நெற் பயிர் வயலிலேயே சாய்ந்து கதிர் முளைத்து நாற்றங்கால் போல் உள் ளது. இதனால் விவசாயிகள் பெரும் சோகத்தில் உள்ளனர். 

வைக்கோல் கூட மிஞ்சாமல் அழுகி நாசமாகிவிட்டது. கால்நடைகளுக்கு வைக்கோல் கிடைப்பது அரிதாகவேஉள்ளது. எனவே அரசு நிவாரணத்தைகூடுதலாக வழங்கவும் பாதிக்கப்பட் டுள்ள பயிர்களை மீண்டும் ஆய்வு செய்து 100 சதவீத பயிர் காப்பீடு தொகை விவசாயிகளுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொள்ளிடம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

;