tamilnadu

img

கொள்முதல் நிலையங்களில் கேட்பாரற்று கிடக்கும் நெல்மூட்டைகள்... நடவடிக்கை எடுக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்....

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல் மூட்டைகள்  கிடங்குகளுக்கு முறையாகஅனுப்பப்படாமல் ஒவ்வொரு மையங்களிலும் ஆயிரக்கணக்கான மூட்டைகள் உரிய பாதுகாப்பின்றி கேட்பாரற்று கிடக்கும் நிலை நீடித்து வருகிறது.

இதனிடையே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டக்குழு கூட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பற்ற முறையில் பல மாதங்களாக தேங்கிக் கிடக்கும் நெல்மூட்டைகளை உடனடியாககிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட தரங்கம்பாடி, சீர்காழி, மயிலாடுதுறை, குத்தாலம் வட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 100- க்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல்கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டு இயங்கி வந்தநிலையில் விவசாயிகளிடம் ஏராளமான கெடுப்பிடிகள் போட்டு, 40 கிலோ மூட்டை ஒன்றுக்கு 44 ரூபாய் வரைலஞ்சமாக பெற்ற பிறகே நெல்லை வாங்கிய நிலையில்,கடந்த சில வாரங்களாக கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகள் மையங்களில் அடுக்கி வைக்கப்பட்டு உரிய பாதுகாப்பின்றி கேட்பாரற்றுக் கிடக்கின்றன. உடனடியாக தமிழ்நாடு உணவுப்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் மூட்டைகளை கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளனர்.

;