tamilnadu

img

கொரோனா கட்டுப்பாடுகளால் வெறிச்சோடி காணப்படும் தரங்கம்பாடி....

மயிலாடுதுறை:
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்  மக்கள் கூட்டத்துடன் காணப்படும் தரங்கம்பாடி கடற்கரை பகுதி தற்போது வெறிச்சோடிக் காணப்படுகிறது.

தரங்கம்பாடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற டேனிஷ் கோட்டைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று நோய் அச்சுறுத்தல் காரணமாக குறைவான சுற்றுலா பயணிகளே வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இதனால் மக்கள் கூட்டமின்றி தரங்கம்பாடி நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது.  அதேபோன்று தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஒழுகைமங்கலம் ஸ்ரீ மாரியம்மன் கோவில், அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை கொரோனா கட்டுப்பாடு விதிகளின்படி முகக் கவசம், கிருமி நாசினி, தனிமனித இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்யலாம்.மேலும் கோவில்களில் திருவிழாக்கள் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

;