tamilnadu

img

சிபிஎம் தென்காசி மாவட்டக்குழு அலுவலகம் திறப்பு விழா....

தென்காசி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி மாவட்டக்குழு அலுவலக திறப்பு விழா வெள்ளியன்று மாலை நடைபெற்றது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றினார். இவ்விழாவில் மார்க்சிஸ்ட் மாத இதழுக்கு 200க்கு மேற்பட்ட சந்தாக்கள் வழங்கப்பட்டன. மேலும் கட்சி வளர்ச்சிநிதி இலக்கை நிறைவு செய்தகிளைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

விழாவில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆர்.கருமலையான், பி.சுகந்தி, கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் உ.முத்துப் பாண்டியன் உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ஜெயராஜ், டி.கணபதி, பி.வேலுமயில், எம். வேல்முருகன், எம். தங்கம், பி.உச்சிமாகாளி, வி.குணசீலன், நெல்லை மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.ஸ்ரீராம், தென்காசி வட்டசெயலாளர் அயூப்கான்உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

;