உடுமலை, நவ. 30- உடுமலை கிளை நூலகம் எண் இரண்டில் திருக்குறள் திறனறி போட்டிகள் நடத்தப்பட்டன. உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகத்தில் திருக்குறள் திறனறிதல் போட்டிகள் நடத்தப் பட்டது. நூலக வாசகர் வட்டம், உடுமலை திருவள்ளுவர் திருக்கோட்டம் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாண வியர்களுக்கு ஓவியம், கட்டுரை, பேச்சு, கவிதை போட்டி கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நூலக வாசகர் வட்ட உறுப்பினரும், அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியரு மான திருமாவளவன் தலைமை வகித்தார். நூலகர் வீ.கணே சன் வரவேற்றார். உடுமலை பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் ஐ.சாந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறனறி போட்டிகளை துவக்கி வைத்தார். திருவள்ளுவர் திருக்கோட்ட அருள்கணேசன், வி.கே.செல்வராஜ், கவிஞர் தனுஷ், பேராசிரியர் கண்டிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பாப்பான்குளம் குமரலிங்கம், சிவசக்தி காலனி அரசுப்பள்ளி, பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேனிலை பள்ளி மாணவியர் ஓவியம், கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டனர். இன்றும் (ஞாயிறு) கவிதை, கட்டுரை, பேச்சுப் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும், ஓவியப்போட்டிகளும் நடைபெறுகிறது.