tamilnadu

img

துறைமுகங்கள் ‘மேம்பாடு’ தனியாருக்கு தாராளம்... கடல்சார் மாநாட்டில் பிரதமர் மோடி தகவல்.....

தூத்துக்குடி:
நாட்டிலுள்ள துறைமுகங்களின் மேம்பாட்டுக்காக வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் சுமார் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய கடல்சார்  மாநாடு தில்லியில் செவ்வாயன்று நடைபெற்றது. அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்து பிரதமா் மோடி பேசியதாவது:

கடல்சார் பொருளாதாரத்தில் உலகின் முன்னணி நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. கடல்சார்  துறையின் வளா்ச்சியை ஊக்கப்படுத்துவதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது. கடல்சார்  உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது, சீா்திருத்தங்களை மேற்கொள்வது உள்ளிட்டவற்றின் வாயிலாக நாட்டைத் தற்சார்பு அடையச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் வளா்ச்சியில்பங்கெடுக்குமாறு சா்வதேச நிறுவனங் களுக்கு இந்த மாநாட்டின் வாயிலாக அழைப்பு விடுக்கிறேன். சாகா்மாலா திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் கோடி முதலீட்டில் 574 திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2035-ஆம் ஆண்டுக்குள் அத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். துறைமுகங்கள் மேம்பாட்டில் தனியார் துறை அதிக அளவில் பங்களிக்க வேண்டும்.

ரூ.2.25 லட்சம் கோடி மதிப்பீட்டில் 400 திட்டங்கள் செயல்பாட்டுக்குத் தயார்நிலையில் உள்ளன. அவற்றில் தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகளை அளிக்க வேண்டும். நாட்டின் துறைமுகங்களில் சா்வதேச நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.கடல் விமானங்களின் செயல்பாட்டுக் காக 16 இடங்களில் ஓடுபாதைகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 5 தேசியஉள்நாட்டு நீா்வழிப் போக்குவரத்து வழித்தடத்தில் படகு முனையத்துக்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.நாட்டில் கலங்கரை விளக்கம் அமைந்துள்ள 189 இடங்களில் 78 பகுதிகளைசுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கலங்கரை விளக்கம் அமைந்துள்ள பகுதிகள் பெரும் பலனடையும். தீவுகளை சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள முக்கிய துறைமுகங்களில் சூரிய ஆற்றல் மூலமாகவும், காற்றாலை மூலமாகவும் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2030-ஆம் ஆண்டுக்குள் துறைமுகங்களின் எரிசக்தி பயன்பாட்டில் 60 சதவீதத்தை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் வாயிலாக உற்பத்தி செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.துறைமுகங்கள், கப்பல் போக்கு வரத்துத் துறை அமைச்சா் மன்சுக் மாண்ட வியா உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

;