tamilnadu

img

ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் ரயில் திருவள்ளூர் வந்தடைந்தது.....

திருவள்ளூர்:
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து 30,000  லிட்டர் மருத்துவ ஆக்சிஜனை ஏற்றிக்கொண்டு  சிறப்பு ரயில் திருவள்ளூர்  ரயில் நிலையம் வந்தடைந்தது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறும் நோயாளிக்கு ஆக்சிஜன் தேவைகளும்  அதிகரித்து வருகிறது. இதனால், தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து  சரக்கு ரயில் மூலம் டேங்கர் லாரிகளில் திரவ ஆக்சிஜன் நிரப்பி தமிழகத்திற்கு அனுப்ப முயற்சிகள் எடுக்கப்பட்டது.தெற்கு ரயில்வே உதவியுடன் முதன்முறையாக  திருவள்ளூரிலிருந்து கடந்த 12 தேதி 2 டேங்கர் லாரிகள் அனுப்பப்பட் டது. இந்நிலையில் ரூர்கேலாவிலிருந்து  30,000 மருத்துவ திரவ ஆக்சிஜன் நிரப்பி திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு மே 15 அன்று காலை வந்தடைந்தது.திருவள்ளூர் வந்தடைந்த ஆக்சிஜன் டேங்கர்கள்  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. தமிழகத்திற்கு ஆக்சிஜனை  கொண்டு வருவதற்காக மேற்கு வங்க மாநிலம் துர்காப்பூருக்கும் ஒரு  ரயிலும் ஒடிசா மாநிலம் கலிங்கா நகருக்கு மற்றொரு ரயிலும் திருவள்ளூரில் இருந்தும் தண்டையார்பேட்டையில் இருந் தும் சென்றுள்ளது.

;