tamilnadu

img

கும்மிடிப்பூண்டி டயர் உற்பத்தி ஆலையில் தீ விபத்து

கும்மிடிப்பூண்டி, ஜன.18-
கும்மிடிப்பூண்டி டயர் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில்  பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் பவர் மேக்ஸ் என்ற வாகன டயர்கள் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலையில் வைக்கப்பட்டு இருந்த ஆயிரக்கணக்கான டயர்களும் பற்றி எரிந்தது.
இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து 3 மணி நேரமாக தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
இந்த தீ விபத்து காரணமாக கும்மிடிப்பூண்டி மற்றும் சிப்காட் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

;