tamilnadu

img

அதானி கொள்ளைக்கு துணைபோகும் அதிமுக அரசு..... காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து இளைஞர்கள் மறியல்....

திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்தகாட்டுப்பள்ளியில் கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எல்என்டி நிறுவன துறை முகத்தின் 97 சதவீத பங்குகளை, அதானி குழுமம்1950 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

330 ஏக்கர் பரப்பளவில் உள்ள அந்த துறைமுகத்தை 54 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், மேலும் சுமார் 6110 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்வதற்காக அதானி குழுமம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரியுள்ளது. மீனவர்களை அழிக்கும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று (ஜன.22) மீஞ்சூரில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.மதன்  தலைமையில் ஊர்வலம் மற்றும்சாலை மறியல் நடைபெற்று. மாவட்டச் செயலாளர் எஸ்.தேவேந்திரன் உட்பட 50 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா செய்தியாளர்களிடம் கூறுகையில்,“ கடல் வளத்தையும், இயற்கை வளத்தையும் சூறையாடும் வகையில் அதானிக்கு மோடி அரசு தாரை வார்த்துள்ளது கண்டிக்கத்தக்கது” என்றார். தனியர் நிறுவனமான ஜியோ நிறுவனத்திற்கு 4-ஜி உரிமத்தை கொடுத்து பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை அழித்த மத்திய பாஜக அரசு, சென்னை துறைமுகத்தையும் அழிப்பதற்கு காட்டுப்பள்ளி அதானிதுறைமுகத்திற்கு அனுமதித்துள்ளது என்றும் இந்த துரோகத்திற்கு மாநில அரசும் துணை போகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.மக்கள் நலனை பாதுகாக்க, கடல் வளத்தை, மீனவர்களை பாதுகாக்க தமிழகம் முழுவதும் இந்தப் போராட்டம் நடைபெறும் என்றும் சுற்றுச்சூழலை, மீனவ மக்களை பாதிக்கக்கூடிய இந்த விரிவாக்கத் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக  கைவிடும் வரை  எங்கள் போராட்டம் தொடரும் என்றும் பாலா கூறினார்.

;