tamilnadu

img

கல்லரைப்பாடி தலித் ஊராட்சி மன்றத் தலைவரை செயல்படவிடாமல் தடுத்து ஊராட்சி மன்றச் செயலர் அட்டூழியம்.... மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்....

திருவண்ணாமலை:
கல்லரைப்பாடி தலித் ஊராட்சி மன்றத் தலைவரை செயல்படவிடாமல் தடுக்கும் ஊராட்சி மன்றத் தலைவரின் சாதிய அட்டூழியத்தையும் இதற்கு உடந்தையாக உள்ளமுன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடுதீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டித்துள் ளது. 

திருவண்ணாமலை மாவட்டம், புதுப் பாளையம் ஒன்றியம், கல்லரைப்பாடி ஊராட்சி தற்போது தனி ஊராட்சியாக இருக்கிறது. இதனால் கடந்த உள்ளாட்சித் தேர்தலில்தலித் சமூகத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர்போட்டியிட்டு 17 வாக்குகள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றார். ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாகதலைவர் ஏழுமலையை அவரது பணிகளைசெய்யவிடாமல் ஊராட்சி மன்றச் செயலாளர் வேல்முருகன் மற்றும் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் கே.டி.ராஜமூர்த்தியும் தடுத்து வந்துள்ளனர். ஊராட்சி செயலாளர் வேல்முருகன் இதே ஊராட்சியில் பல ஆண்டு களாக பணியாற்றிவருகிறார்.மேலும் வேல்முருகனின் தந்தை மற்றும் அவரது தாய் தலாஒரு முறை என இதற்கு முன்னர் பத்து ஆண்டுகள் கல்லரைப்பாடி ஊராட்சித்  தலைவராகஇருந்துள்ளனர். வேறு எவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டாலும வேல்முருகன்தான் தலைவர் போல் செயல்பட்டு வந்துள்ளார்.கணக்குப் பதிவேடுகள் அனைத்தையும் தனது வீட்டிலேயே வைத்துக்கொண்டு அவரே நிர்வாகத்தை கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வந்திருக்கிறார். 

இந்நிலையில் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஏழுமலை சுயமாக செயல் படத் துவங்கியுள்ளார்.கிராம ஊராட்சி நிர்வாகத்தையும் சுகாதாரம், மின்விளக்கு உள்ளிட்ட மக்களின் தேவைகளையும் நிறைவேற்றி வந்துள்ளார். இதனை வேல்முருகனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.தனது வீட்டில் படியாளாக வேலைபார்த்த குடும்பத்தில் இருந்து வந்த ஏழுமலை நிர்வாகம் செய்வதா? என்ற ஆத்திரத்தில் “எங்கள்வீட்டில் ஆடு, மாடு மேய்த்தவன் தலைவராக வந்தால் அதிகாரம் செய்வாயா” என தலைவரை கடுமையாகப் இழிவுபடுத்திப் பேசியுள்ளார். தலித் பகுதியில் மட்டும் தான் நீபணி  செய்ய வேண்டும்.மற்ற பகுதியில் நாங்கள் பார்த்துக்கொள்வோம் என தடுத்துள்ளார். அவ்வாறே நூறு நாள் வேலைத்திட்டத்தில் தலித் மக்கள் வேலைசெய்யும் போதுதான் நீ பார்வையிடலாம்,மற்றவர்கள்  வேலை செய்யும் போது அங்கு வரக்கூடாது என்றும் அவரது பணியை சாதிய துவேசத்துடன் மிரட்டி,தடுத்துள்ளார். 

இந்த வேல்முருகனின் நடவடிக்கைகளுக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலை வர் கே.டி.ராஜமூர்த்தியும் ஆதரவாக செயல்பட்டுள்ளார்.குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணியில் தலைவர் ஏழுமலை ஈடுபட்டபோது “நீஎல்லாம் குழாய் போட்டுத்தான் நாங்கள்தண்ணீர் குடிக்கணும் என்று எந்த அவசியமும இல்லை.குழாயை இணைக்கிறமாதிரி சாதிய இணைக்க பாக்கிறீயா” எனமிரட்டியுள்ளார்.குடிநீர் விநியோகம், தெருவிளக்கு,சுகாதாரம் என ஊராட்சியில் இருக்கிற ஆறு பணியாளர்களையும் நீவேலை வாங்கக் கூடாது, வேல்முருகன்தான் அவர்களுக்கு வேலை சொல்லவேண்டும்.அவர்கள் வேல்முருகனுக்குத் தான் கட்டுப்பட்டவர்கள். உனக்கு அல்லஎன ஊராட்சி செயலாளரின் உறவினர் ஒருவர் குடிபோதையில் ஆட்களுடன் ஏழுமலை வீட்டிற்கு வந்து  மிரட்டியுள்ளார்.  இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு ஊராட்சி மன்றத் தலைவர் ஏழுமலை தெருவிளக்குகளை பொருத்தியதால் ஆத்திரமுற்ற ஊராட்சி செயலாளர் வேல்முருகன் ‘யாரைக் கேட்டு இதை செய்தாய்?  செருப்பால் அடிப்பேன்’  என இழிவாகப் பேசியதால்மன உளைச்சலுக்குள்ளான தலைவர் ஏழுமலை தனது மனைவி , குழந்தைகளுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளார்.

ஊடகங்களில் செய்தி வெளியானது. சமூக இயக்கங்களின் அழுத்தம் காரணமாகஊராட்சி மன்ற செயலாளர் வேல்முருகன்பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் தவறு செய்தவர்கள் மீது வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.மேற்படி கல்லரைப்பாடி கிராமத்திற்குமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டச்செயலாளர் எம்.சிவக்குமார்,தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச்செயலாளர் ப.செல்வன், வழக்கறிஞர்.எஸ்.அபிராமன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன்,எம்.பிரகலநாதன், எஸ். ராமதாஸ் மற்றும் எம்.பிரகாஷ்,ஆர்.காமராஜ் ஆகியோர் நேரடியாகச் சென்று ஏழுமலைக்கு தங்களது ஒருமைப் பாட்டை தெரிவித்தனர்.

உறுதியான நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுத்தினர்.இதுகுறித்து சிபிஎம் மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார் கூறுகையில், தமிழ்நாடுஊராட்சிகள் சட்டம் 1994 இன்படி  தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் ஊராட்சித் தலைவரைபணி செய்யவிடாமல் தடுத்தாலும், நெருக் கடிகள் கொடுத்தாலும் அவர்கள் மீது வட்டாட்சியர் அல்லது ஊராட்சிகளுக்கான கூடுதல் இயக்குநர் அல்லது மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும்.ஆனால் இடைநீக்கம் மட்டும் செய்துவிட்டு சமாதானமாக போங்கள் என அதிகாரிகள் நழுவுவது ஏற்புடையதல்ல என்றார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலதுணைப்பொதுச் செயலாளர் ப.செல்வன் கூறுகையில், சாதிரீதியாக ஏற்றத்தாழ்வுடன் ஊராட்சித் தலைவரை இழிவுபடுத்திய  ஊராட்சி செயலாளர்  வேல்முருகன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கே.டி.ராஜமூர்த்தி மீதும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்,ஊராட்சித் தலைவர்  அதிகாரப்பூர்வமாக வேலை செய்வதைஉறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

;