tamilnadu

திருச்சிராப்பள்ளி ,மன்னார்குடி மற்றும் தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

பெண்ணிடம் செயின் பறிப்பு

திருச்சிராப்பள்ளி, மே 19-மணப்பாறை அண்ணா நகரை சேர்ந்தவர் சிவசங்கரி(30). இவர் சனிக்கிழமை மதியம் வீட்டின் அருகே நடந்துவந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால்இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிவசங்கரியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுதொடர்பாக மணப்பாறை காவலர்கள் வழக்கு பதிவு செய்து தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

திருச்சிராப்பள்ளி, மே 19-திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வளநாடு அயன்பொருவாய் ஊராட்சிக்குட்பட்ட சின்னாரம்பட்டி பகுதியல் கடந்த சில மாதங்களாக முறையாக காவிரிகுடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது தொடர்பாகஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்விதநடவடிக்கையும் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் சனிக்கிழமை மாலை சின்னாரம்பட்டியில் அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால்குடிநீர் வழங்கினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும்என பொதுமக்கள் தெரிவித்தனர். இதைதொடர்ந்து அங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


சாலை தடுப்பில் மோதி 2 பேர் படுகாயம்

திருச்சிராப்பள்ளி, மே 19-திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த தீர்த்தகிழவனூர் கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் மகன் கார்த்திக்ராஜ். இவர் திருச்சி சிறப்பு காவல்படை 1-ல் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் தனது சொந்த ஊரில் இருந்து இருசக்கர வாகனத்தில் தனதுமைத்துனருடன் வந்து கொண்டிருந்தார். அப்போது கல்லுப்பட்டி அருகே திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வந்து போது இருசக்கர வாகனம்கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதியது. இதில் கார்த்திக்ராஜ் மற்றும் அவரது மைத்துனரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள், திண் டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து வையம்பட்டி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருநள்ளாறு கோயில் விழா

மன்னார்குடி, மே 19- திருநள்ளாறு தர்பாரேண்யேஸ்வரர் கோயில் வருடாந்திர பிரமோத்சவ தேரோட்டம் மே 29 அன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி சார்பு கோயில்களான ஐயனார், பிடாரி, மாரியம்மன்கோவில் உத்ஸவங்கள் மே 10-ஐயனார், மே-16 பிடாரியம்மன் கோவில்களில் என நடைபெற்றுள்ளன. தர்பாரேண்யேஸ்வரர் கோயில் தேரோட்டம் ஜுன்-12 ம் தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி தேர்க்கால் முகூர்த்தம் மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ராந்த் ராஜா, தருமபுரம் ஆதீன கட்டளைவிசாரணை பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோயில் நிர்வாக அதிகாரி ஜே.சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்புடன் தேர்க்கால் நடப்பட்டது. நிகழ்ச்சியில் ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா கூறுகையிஸ், ஜுன்-12ம் தேதி நடைபெறும் தேரோட்டத்தை காண வரும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தேவையான பல்வேறு வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து வருவதாகக் தெரிவித்தார்.


அறிவிக்கப்படாத மின்வெட்டு மக்கள் கடும் அவதி 

தஞ்சாவூர், மே 19- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த புனல்வாசல் கிராமத்தில் நுகர்வோர் குழு கூட்டம் தலைவர்வி.ஏ.சவரிமுத்து தலைமையில் நடைபெற்றது. செயலாளர்கள் ஆர்.ஏ.செபஸ்தியார், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறுப்பினர்கள் கோகிலா, ஜெயம், ரோணிக்கை மேரி, ஜீலியா, கருப்பையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆரோக்கியம் நன்றி கூறினார். கூட்டத்தில், தற்போதுநிலவும் அறிவிக்கப்பட்டாத மின்வெட்டால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அரசுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மான நகல், தமிழக முதல்வருக்கும், மின்வாரிய அமைச்சர், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் அனுப்பப்பட்டு உள்ளது.