tamilnadu

மிஞ்சிய இட்லியை உப்புமா கிண்டியதுதான் பாஜகவின் தேர்தல் அறிக்கை

புதுக்கோட்டை, ஏப்.10- மிஞ்சிப்போன இட்லியைகிளறி உப்புமா கிண்டுவதுதான்பாஜகவின் தேர்தல் அறிக்கை என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குடி, திருமயம் சட்டமன்றத் தொகுதிகளில் புதன்கிழமையன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் பேசியதாவது:மோடியின் 5 ஆண்டுகால ஆட்சிக்கு மக்கள் போட வேண்டியமதிப்பெண்களே இந்தத் தேர்தல்.பாஜக வேட்பாளர் எச்.ராஜாவுக்கு தெருவில், காவல் நிலையத்தில், நீதிமன்றத்தில் சண்டை வளர்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. இதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம். தந்தை பெரியாருக்கு செருப்பு மாலை போடுவேன் என்று சொன்ன இவரை மன்னிக்கவே கூடாது. சுயமரியாதை உள்ள தமிழர்கள் நாம் என்பதை எச்.ராஜாவுக்கு காட்ட வேண்டும்.பாஜக தென்னிந்திய மக்களைப்பற்றிக் கண்டுகொள்ளாது. இந்தி பேசும் மக்களின் பண்பாட்டை, மொழியை நாடுமுழுவதும் திணிப்பதே அதன் கொள்கை. அவர்களின்தேர்தல் அறிக்கையில் சமஸ்கிருதத்தை கட்டாயப் பாடமாக அறிவித்து இருக்கிறார்கள். இது கொல்லைப்புற வழியாக இந்தியை திணிக்கும் வேலை. கோவிலில்கூட தமிழில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்கிறோம். நமக்கு எதற்கு சமஸ்கிருதம்?பாஜகவின் தேர்தல் அறிக்கைமிஞ்சிய இட்லியை உப்புமா கிண்டுவதற்குச் சமம். கடந்த தேர்தல் அறிக்கையில் உள்ளதை அப்படியே சற்று கிளறி வெளியிட்டுள்ளனர். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கான பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. 5 கோடிஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய், விவசாயக் கடன்ரத்து, விவசாயத்துக்கு தனி பட்ஜெட், மத்திய, மாநில அரசுகளில் காலியாக உள்ள சுமார் 24 லட்சம் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளோம். மோசடியான மோடி அரசை அகற்றுவதற்கு சிவகங்கை தொகுதி மக்கள் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். மத்தியில் மட்டுமல்லாது மாநிலத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் வரும்.இவ்வாறு அவர் பேசினார்.ஆலங்குடி தொகுதி எம்எல்ஏ சிவ.வீ.மெய்யநாதன், முன்னாள் எம்எல்ஏ த.புஷ்பராஜ் மற்றும் கூட்டணிக்க கட்சி நிர்வாகிகள் தங்க.தர்மராஜ், எம்.உடையப்பன், தங்கமணி, இளங்கோவன், சொர்ணகுமார், செல்வராஜ் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

;