tamilnadu

img

நீட் தேர்வு என்ற பெயரில் மாணவர்களை கொலை செய்கிறது பாஜக அரசு

ஜெயங்கொண்டம், ஏப்.10-மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தொல்.திருமாவளவனுக்கு வாக்கு சேகரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.மகாராஜன் தலைமைவகித்தார். எம்.இளங்கோவன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் பாலபாரதி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:பாஜக ஆட்சியின் சாதனைகள்ராமர் கோவில் கட்டுவது, எடப்பாடியை தனது தேவைக்கு பயன்படுத்தி நீட் தேர்வு என்ற பெயரில் மாணவர்களை கொல்வதுதான். நாம் இப்போது ஒரு அனிதாவை தான் இழந்துள்ளோம். மீண்டும் பாஜக அரசுஆட்சிக்கு வந்தால், ஆயிரக்கணக் கான அனிதாகளை இழக்க நேரிடும்.அத்துடன் விலைவாசி உயர்வு, கஜாபுயலால் பாதிக்கப்பட்ட போது வானில் பறந்து பார்வையிட்ட எடப்பாடி ஓட்டுகேட்பதற்கு மட்டும் ஏன் வீதி வீதியாகவேனில் செல்கிறார்? சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை, தூத்துகுடி துப்பாக்கிச் சூடு, பணமதிப்பு நீக்கம் போன்றவற்றால் மக்கள் துயரத்தில் உள்ளனர். நீதி மக்கள் பக்கம் இருப்பதால், சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. மத்திய - மாநில அரசுகள் ஏற்படுத்தி இந்தபாதிப்புகளை கருத்தில் கொண்டுமதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் தொல். திருமாவளவனுக்கு வாக்களியுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், மதிமுக மாவட்டச் செயலாளர் கு.சின்னப்பா, விசிக மாவட்டச் செயலாளர் பெ.மு.செல்வநம்பி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தஞ்சை என்.வி கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றன. ஒன்றியக் குழு உறுப்பினர் சி.உத்திராபதி நன்றி கூறினார்.

;