tamilnadu

img

தஞ்சை தமிழ்ப் பல்கலை.யில் தள்ளுபடி விலையில் நூல் விற்பனை

தஞ்சாவூர், ஏப்.24-உலக தமிழர்களுக்கு இலக்கிய வேடந்தாங்கலாக திகழ்வது தமிழ்ப்பல்கலைக்கழகம். பிற பல்கலைக்கழகங்களுக்கு இல்லாத சிறப்பு, தமிழ் மொழியின் பன்முக தன்மைகளை வெளிப்படுத்தும் நோக்கில் பதிப்புத்துறை மற்றும் அச்சகம் தொடங்கப் பட்டுள்ளது. இதுவரை பதிப்புத் துறையின் வழியாக 452 நூல்கள் வெளியிடப்பட்டுள் ளன. இதில் விற்பனைக்காக தற்போதுஇருப்பில் 250 நூல்கள் உள்ளன. தமிழ் பல்கலைக்கழக பதிப்புத் துறை வெளியீடுகளை மறுபதிப்பு செய்வதற்காக ஆண்டுக்கு ரூ.2 கோடிவீதம், நான்காண்டுகளுக்கு தொடர்நல்கையினை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக முதல்கட்ட நல்கையாக ரூ. 2 கோடிபெறப்பட்டுள்ளது. இதில் சுமார் 225நூல்களை மறுபதிப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும்பல்கலைக்கழக மானியக்குழு நல்கையில் ரூ.13 லட்சத்திற்கு புதிய நூல்கள்அச்சிடும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும் தமிழ் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்ட நாள் மற்றும்பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் நாளிலும், தமிழ் புத்தாண்டினை முன்னிட்டும் பதிப்புத் துறை நூல்கள் 50 சதவீத சிறப்பு கழிவுவிலையில் விற்பனை செய்வது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை முதல்நாளில் இருந்து தொடர் விடுமுறையாகஇருந்ததால் ஏப்ரல் மாதம் 24 முதல் மே 8-ம் தேதி வரை 15 தினங்களுக்கு சிறப்பு கழிவு விற்பனை நடைபெற உள்ளது. 


மாணவர்களும், ஆய்வாளர்களும், தமிழ் அறிஞர்களும், பொதுமக்களும் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நூல்கள் பதிப்புத்துறை, கீழராசவீதி, அரண்மனை வளாகம் தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் என்ற முகவரியில் (தொலைபேசி எண் 04362-274581) கிடைக்கும். கழிவு விலையில் நூல்கள் விற் பனை தொடக்க விழாவினை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கோ. பாலசுப்ரமணியன் தொடங்கி வைத்தார். உலகத் திருக் குறள் பேரவையின் செயலாளர் பழ. மாறவர்மன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பதிவாளர் முனைவர் ச.முத்துக்குமார், பதிப்புத்துறை இயக்குனர் பேராசிரியர் பா.ஜெயக்குமார் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள், ஆய்வு மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

;