tamilnadu

img

நீங்க பணத்தால் அடித்தால் நாங்க பாட்டால் அடிப்போம்!

ஓட்டு பெறுவதற்கு அதிமுக பணத்தால அடிக்கிறாங்க. நாம பாட்டால அடிப்போம். அன்பால அடிப்போம். நம்மிடம் இருப்பது அன்பு தான் என்று பிரகதீஸ்வரன் தலைமையிலான புதுகை பூபாளம் கலைக்குழுவினர் அரசியல் கருத்துக்களை நகைச்சுவை ததும்ப எடுத்துரைத்தனர். மேலூர் செக்கடியில் நடைபெற்ற கலை மாலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரகதீஸ்வரன், செந்தில் மற்றும் தவில் விநாயகம் ஆகியோரின் பிரச்சார நகைச்சுவை சரவெடிகளின் தெறிப்புகளாவன. 


அதிமுக மக்களை பணத்தால் அடிக்கிறாங்க. நாங்க அவங்களை (அதிமுகவினரை) பாட்டால அடிப்போம். நமக்கிட்ட அன்பு மட்டும் தான் இருக்கிறது. அதை தான் நாங்க கொடுக்க முடியும். 1980 களில் நடைபெற்ற தேர்தலில் திமுக தேர்தல் பாடல்கள் நம்மை மிகவும் ஈர்த்தது. காமாட்சியே காமாட்சியே நாளை வரும் நம்மாட்சியே என்ற பாடல் முதல் அனைத்து பாடல்களும் நம்மை ஈர்த்தன. இன்றைக்கு தேர்தல் பாடல்களை கேட்க முடியல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போயும் போயும் ஒரு எழுத்தாளரை நிறுத்தியிருக்கிறாங்க என்கிறார் நம்ம உள்ளூர் உலக விஞ்ஞானி செல்லூர் ராஜூ. வெங்கடேசன் என்ன பத்தர ஆபிசில் உட்கார்ந்து பத்திரம் எழுதுபவர் என்று நினைத்துக் கொண்டு இப்படி பேசுகிறார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் என்பது அவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. நம்ம பிரதமரு உலகம் முழுக்க சுத்தி வருகிறார். ஒரு முறை சீன அதிபர் இந்தியாவிற்கு வந்துவிட்டார். மோடியை கைகுலுக்கி உங்களை தான் பார்க்க வந்தேன் என்றார். நம்ம மோடி பதிலுக்கு நீங்க வந்திருக்கீங்க என்று கேள்விப்பட்டு நானும் இந்தியாவிற்கு வந்தேன் என்றார் மோடி. வெளிநாடுகளுக்கு போய் வருவது போல மோடி இந்தியாவிற்கும் அவ்வப்போது வந்து செல்வார். அமெரிக்க சாட்டிலைட்டை அடிச்சு உடைச்சிட்டதாக பாஜகவினர் சொல்லி வருகிறார்கள். அதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால். அது தான் அந்த சேட்டிலைட்டில் இருக்கிறது. அந்த சாட்டிலைட் எங்க என்றால் அதான் அடிச்சு உடைச்சிட்டோமே என்கிறார். இது செந்தில் - கவுண்டமணியின் வாழைப்பழ ஜோக் மாதிரி இல்லையா? 


யார் முட்டாள் என்று தெரியும்...


1947 இல் சுதந்திரம் வாங்கினோம். சுதந்திரம் வாங்கித்தந்த காந்திய 1948 இல் சுட்டுக்கொன்றார்கள் இந்துத்துவா வாதிகள். ஏன்னே அவர் இறந்துட்டாரு என்று தான சொல்கிறாங்க. சுட்டுக்கொன்னாங்களா? சுட்டுக்கொன்றவங்க வாரிசு ஆட்சியில நாங்க தான் கொன்றோம் என்று சொல்வாங்களா? மாத்தி தான் சொல்வாங்க. தில்லியில் ஒருத்தர் மோடி ஒரு முட்டாள் என்று அட்டையில் எழுதி பிடித்துக்கொண்டு நின்றார். தில்லி போலீஸ் அவரை கைது செய்யும் போது நான் முட்டாள் என்று மோடியைச் சொல்லவில்லை நீரவ் மோடியைத்தான் எழுதினேன் என்று நழுவினார். ஆனால் போலீசோ எங்களுக்கு தெரியாதா யார் முட்டாள் என்று நீ மோடியைத் தான் சொல்கிறாய் என்று கைது செய்தனர். 


ஜெமினி பொம்மைகள் இபிஎஸ், ஓபிஎஸ்


மாமனா, மச்சானா நம்ம இபிஎஸ், ஓபிஎஸ் இருக்கிறாங்க. இல்லை அந்த காலத்தில ஜெமினி ஸ்டுடியோ சின்னம் இருக்கும். அதில் இரண்டு குழந்தைகள் பீப்பி ஊதிக்கிட்டு ஒன்றாக நிற்கும். ஒன்றாக திரும்பும். அது போல ஒற்றுமையாக இருக்கிறார்கள் இபிஎஸ், ஓபிஎஸ் 


வாட்ச்மேன் ஆட்சியில் ஜென்டில் திருட்டு


சவுகிதார் (வாட்ச்மேன்) ஆட்சியில ஜென்ட்டிலான திருட்டு நடத்துகிறார்கள். ரபேல் போர் விமானம் தொடர்பான ஆவணங்களை உச்ச நீதிமன்றம் கேட்ட போது அந்த ஆவணங்கள் திருட்டு போனதாக கூறப்பட்டது. அந்த திருடன் அந்த ஆவணத்தை ஜெராக்ஸ் எடுத்திட்டு ஜென்ட்லா கொண்டு வந்து திரும்ப வைத்துவிட்டான். ஒரு பத்திரத்தை பாதுகாக்க முடியல நீயெல்லாம் என்ன வாட்ச்மேன். 


பாஜகவின் லீசு கவர்மெண்ட்


பொதுவாக தேர்தலில் அதிமுக, பாஜகவை வைச்சு செய்வாங்க. ஆனால் இந்த தேர்தலில் செஞ்சு செஞ்சு வைக்கிறாங்க. எடப்பாடி ஆட்சியை பாஜக லீசுக்கு எடுத்து நடத்திட்டு இருக்காங்க. ஒரு வாரத்திற்கு முன்பு தான் எடப்பாடி அரசாங்கம் 3 ஆயிரம் கோடிக்கு முட்டையில ஊழல் என்று பெரிய மாம்பழமும், சின்ன மாம்பழமும் ஆளுநரிடம் புகார் கொடுத்து வந்தாங்க. அதெப்படிண்ணே முட்டையில ஊழல் செய்ய முடியும். கொஞ்சம் ஒடுக்கி முட்டை போடு என்று முதல் நாளே போய் கோழிக்கிட்ட சொல்லிட்டு வந்துவிடுவார்கள். அதனால் அந்த முட்டை சின்ன முட்டையாக இருக்கும். இப்ப என்னடான்னா இரட்டை இலைக்கு மாம்பழம் ஓட்டுக் கேட்டு வருகிறது. மோடி 5 ஆண்டு காலமும் எடப்பாடி 2 ஆண்டுகாலமும் தமிழக மக்களை துன்பத்திற்கு ஆளாக்கினார்கள். ஆடுபவர்களையும், ஆதிக்க சக்திகளையும் ஆட்டுவிக்கும் சின்னம் தான் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம். சு.வெங்கடேசனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். 


கோட்டைக்குள்ளே முதலைகள்


வல்லம் தாஜ்பால் 


கலை மாலையில் கவிஞர் வல்லம் தாஜ்பால் தனது கவிதைகளால் பாஜக - அதிமுக ஆட்சியின் அவலங்களை தோலுரித்துக் காட்டினார். ஒரு காலத்தில் கோட்டைக்கு வெளியே அகழியில் முதலைகள் இருக்கும். இன்று கோட்டைக்கு உள்ளே முதலைகள், கொக்குகளை நம்பும் மீன்களாக இருக்காதீர்கள். பன்முக பண்பாட்டைக் கெடுக்கும் மதவெறி. அந்த பாதகர்களை வீழ்த்தட்டும் ஏப்ரல் 18 என்று தனது கவிதையில் வல்லம் வேண்டுகோள் விடுத்தார். 


செக்கடியை கிரங்கடித்த கலைக்குழுக்கள் 


குமரி முரசு கலைக்குழு, வேலூர் சாரல் கலைக்குழு, சிவகங்கை செம்மலர் கலைக்குழு என கலைக்குழுக்களின் பாடல்கள், இசை கச்சேரி நடைபெற்றன. பொய்க்கால் குதிரை, இரட்டை மாடு தப்பாட்டம் என செக்கடி மக்களை கலை நிகழ்ச்சிகளால் கிரங்கடிக்க வைத்தது கலை மாலை. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். 


டப்பாங்குத்து டான்சும் தில்லானா பரதமும்


தில்லானா மோகனாம்பாள் திரைபடத்தில் டப்பாங்குத்து ஆட்டம் ஆடும் மனோரமா, பத்மினியின் பரதநாட்டியம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்கு செல்வார். மோகனாங்கின்னு ஒருத்தி வந்து ஆடப்போறாளாம். அவ எப்படி ஆடுறான்னு பார்த்திட்டு வாறேன் என்று செல்வார். ஆனால் அங்கு பத்மினியின் பரதநாட்டியத்தை பார்த்து வியந்து போவார். அது போல வாக்கு சேகரிக்கிற சாக்கில தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கலை மாலை எப்படி இருக்கிறது என்று செக்கடி பக்கம் அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் தனது படை பரிவாரங்களுடன் வந்து மனோரமா பாணியில் கலை மாலையை பார்த்துவிட்டு சைசாக சென்றார். ஒரு பரபரப்பு நிலவினாலும் அதிமுக தொண்டர்களையே பார்த்து சலித்தவருக்கு, தமுஎகச மேடை வித்தியாசமாக இருந்திருக்கும். கலக்கத்தையும் தந்திருக்கும்.




தொகுப்பு: இலமு, தொகுப்பு: ரணதிவே




;