தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை (தொமுச) பொதுச்செயலாளர் மு.சண்முகம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையொட்டி அவரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் கே. ஆறுமுகநயினார், நிர்வாகிகள் ஏ.பி. அன்பழகன், எம்.சந்திரன், நடராஜன், சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா. பாலகிருஷ்ணன், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் எம்.தயானந்தம் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.